உயிர்ப்பு உலர்தாவரகம் (Herbarium vivum) என்பது உலர் தாவரகத்தின் மேம்பட்ட ஆவணக் காப்பகம் ஆகும்.[1] ஒரு குறிப்பிட்ட இடத்தின் தாவரங்கள், அவைகளின் படங்கள், அவைகளின் பறத் தோற்ற விவரங்களைச் சேகரித்து வைக்கும் இடம் ஆகும். உலர்தாவரகத்தின் ஒரு தாவர ஆவணம் காய்ந்து, அதன் தோற்றம் மங்கி உயிப்புடன் இருக்காது. அதனைஅனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. ஆனால், உயிரிப்பு உலர் தாவரக ஆவணமானது ஒப்பிட்டளவில் நிறங்களை எளிதில் உணர இயலும். மேலும் தாவரப் பாகங்களின் அளவு சுருங்காமல் அதே அளவு உருவாக்கப்படுகிறது. அதனால் யாவரும் எளிதில், ஒரு தாவரத்தின் புறத்தோற்றத்தினை எளிதில் உணர இயலும். பொதுவாக இவை செதுக்குதல் (engraving) நுட்பத்தாலும், கல்லச்சுக்கலை (lithography) நுட்பத்தாலும், ஒரு ஆவணத்திற்குரிய தாவரம் வார்ப்பு செய்யப்படுகிறது. பிறகு அச்சு மைகளாலும், பிற நிறமூட்டிகளாலும், இக்கலைகளால் உருவாக்கப்பட்ட படங்கள் உயிரோட்டம் பெறுகிறது. அதனால் தாவரங்களின் புறத்தோற்றத்தினைக் குறிப்புகளுடன், எளிதில் அறிய முடிகிறது. 1562 ஆம் ஆண்டில், செருமானிய தாவரவியலாளர் எயிரோனைமசு ஆர்டேர் (Hieronymus Harder (1523-1607)) என்பவர் முதன்முதலில் உருவாக்கிய, உயிர்ப்பு உலர்தாவரகம் 12 தொகுதிகளில் வெளிவந்தது. அவற்றில் ஒரு ஆவணத்தினை, இணைநிலையில் (online) இங்கு காணலாம்[2].