பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
உருத்தேனியம் முவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
715652-38-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
RuI3 | |
அடர்த்தி | 5.25 கிராம் செ.மீ−3 |
மிகச்சிறிதளவு கரையும்[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம்[1] |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
−247 யூல் மோல்−1 கெல்வின்−1[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | உருத்தேனியம்(III) புளோரைடு உருத்தேனியம்(III) குளோரைடு உருத்தேனியம்(III) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(III) அயோடைடு ஓசுமியம் அயோடைடு தெக்னீசியம்(III) அயோடைடு ரோடியம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உருத்தேனியம்(III) அயோடைடு (Ruthenium(III) iodide) RuI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியமும் அயோடினும் சேர்ந்து கருப்புநிற திண்மமாக இது உருவாகிறது.[2]
உருத்தேனியம்(III) அயோடைடை தயாரிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.[1][3]
உருத்தேனியம் டெட்ராக்சைடுடன் நீர்த்த ஐதரோ அயோடிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[4]
பெண்டா அமீன் உருத்தேனியத்தை வெப்பப் பகுப்பு செய்தாலும் உருத்தேனியம்(III) அயோடைடு கிடைக்கிறது:[3]
நீரேற்ற உருத்தேனியம்(III) குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடின் நீரிய கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உப்பிடப்பெயர்வு வினை நிகழ்ந்து உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[1]
350 பாகை செல்சியசு வெப்பநிலை போன்ற சில நிபந்தனைகளில் பகுதிக் கூறுகளாக உள்ள தனிமங்கள் இணைந்தும் உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[1]
உருத்தேனியத்தில் எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்துடன் உருத்தேனியம்(III) அயோடைடு நீட்டிக்கப்பட்ட கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. உருத்தேனியம்(III) அயோடைடின் குணாதிசயத்தில் உள்ள ஐயம் காரணமாக இது ஆக்சோ ஆலைடு அல்லது ஐதராக்சி ஆலைடாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது,