இனங்காட்டிகள் | |
---|---|
14014-88-1 | |
ChemSpider | 75924 |
EC number | 237-829-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 176290 |
| |
UNII | VJ7MYGN19I |
பண்புகள் | |
RuBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 340.782 கி/மோல் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம்[1] |
புறவெளித் தொகுதி | Pmmn, No. 59 |
ஒருங்கிணைவு வடிவியல் |
octahedral |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | உருத்தேனியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ரோடியம்(III) புரோமைடு இரும்பு(III) புரோமைடு மாலிப்டினம்(III) புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உருத்தேனியம்(III) புரோமைடு (Ruthenium(III) bromide) RuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியம் தனிமமும் புரோமினும் சேர்ந்து வினைபுரிந்து அடர் பழுப்பு நிறத்தில் உருத்தேனியம்(III) புரோமைடு உருவாகிறது. 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இச்சேர்மம் சிதைவடைகிறது.[2]
720 கெல்வின் வெப்பநிலை மற்றும் 20 பார் அழுத்தத்தில் உருத்தேனியம் தனிமமும் புரோமினும் சேர்ந்து உயர் வெப்பநிலையில் வினைபுரிந்தால் உருத்தேனியம்(III) புரோமைடு உருவாகும் :[3]
உருத்தேனியம்(III) புரோமைட்டின் படிக அமைப்புகளில் இணையான (RuBr3)∞ நெடுவரிசைகள் உள்ளன. 384 கெல்வின் வெப்பநிலையில் அதாவது 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருத்தேனியம்(III) புரோமைடு கட்டமாற்றத்திற்கு உட்படுகிறது. இம்மாற்றத்தின் போது நீண்டும் குறுகியும் மாறி மாறி உள்ள Ru-Ru தூரங்களைக் கொண்ட Pnmm இடக்குழுவிலுள்ள நேர்சாய்சதுரக் கட்டமைப்பிலிருந்து TiI3 போன்ற P63/mcm இடக்குழுவில் (சராசரியாக) சமமான Ru-Ru தூரத்துடன் கூடிய ஓர் ஒழுங்கற்ற அறுகோணக் கட்டமைப்பிற்கு மாறுகிறது.[1] சீர்குலைந்த இப்பல்லுருவத்தில் Ru-Ru தூரங்கள் உண்மையில் சமமாக இருப்பதாக தோன்றுவதில்லை, ஆனால் இரண்டு வெவ்வேறு நெடுவரிசை இணக்கங்களின் சீரற்ற விநியோகம் காரணமாக இது இவ்வாறு தோன்றும். இரண்டு பல்லுருவத் தோற்றங்களும் அறுகோண நெருக்கப் பொதிவு புரோமைடு அயனிகளைக் கொண்டிருக்கின்றன. [4]