உருத்ர மகாலய கோயில் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() பிரதான கோயிலின் இடிபாடுகள், உருத்ர மகாலயாவின் தோரணம், 1874 | |||||||||||
மாற்றுப் பெயர்கள் | உருத்ர மாலா | ||||||||||
பொதுவான தகவல்கள் | |||||||||||
நிலைமை | அழிந்துபோனது | ||||||||||
கட்டிடக்கலை பாணி | மாரு-குர்ஜரா கட்டிடக்கலை | ||||||||||
இடம் | சித்தபூர், பதான் மாவட்டம், குசராத்து | ||||||||||
நாடு | இந்தியா | ||||||||||
ஆள்கூற்று | 23°55′09″N 72°22′45″E / 23.91917°N 72.37917°E | ||||||||||
கட்டுமான ஆரம்பம் | பொ.ஊ. 943 | ||||||||||
திறக்கப்பட்டது | பொ.ஊ. 1140 | ||||||||||
அழிக்கப்பட்டது | பொ.ஊ. 1296 முதல் பொ.ஊ. 1414 வரை | ||||||||||
தொழில்நுட்ப விபரங்கள் | |||||||||||
மூலப்பொருள் | மணல்கற்கள் | ||||||||||
தள எண்ணிக்கை | 2 | ||||||||||
பதவிகள் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தேசிய முக்கிய நினைவுச்சின்னம் (எண் 164 கோயில் வளாகம்/163 பள்ளிவாசல்) | ||||||||||
|
உருத்ர மகாலய கோயில் (Rudra Mahalaya Temple) இந்திய மாநிலமான குசராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள சித்தபூரில் அழிக்கப்பட்ட / இடிந்துபோன கோயில் வளாகமாகும். இதன் கட்டுமானம் பொ.ஊ. 943 இல் மூலராஜாவால் தொடங்கப்பட்டு பொ.ஊ. 1140 இல் சோலாங்கி வம்சத்தின் ஆட்சியாளரான செயசிம்ம சித்தராசனால் முடிக்கப்பட்டது. இது மேலும் உருத்ர மாலா எனவும் அழைக்கப்படுகிறது.
தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி, பின்னர் குசராத் சுல்தான் முகலாம் அகமது ஷா (1410–1444) ஆகியோரால் இந்த இந்துக் கோவில் அழிக்கப்பட்டது. மேலும், கணிசமாக பகுதிகள் இடிபாடுகளாயின. மேலும் அதன் ஒரு பகுதியை நகரத்தின் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. சபை மசூதியாகப் பயன்படுத்தப்படும் வளாகத்தின் மேற்குப் பகுதியில் இரண்டு தாழ்வாரங்களும் முன்னர் மத்திய கட்டமைப்பைத் தாங்கி நின்ற நான்கு தூண்களும் இன்னும் நிற்கின்றன.
சித்தபூர், வரலாற்று ரீதியாக சிறீஸ்தல் என்று அழைக்கப்படுகிறது. அதாவது "ஒரு பக்தியுள்ள இடம்" என்பதாகும்.[1] சோலாங்கி வம்சத்தின் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த சித்தபூர் 10 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கிய நகரமாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் (பொ.ஊ. 943) குசராத்தின் சோலாங்கி வம்சத்தின் நிறுவனரான மூலராஜா, உருத்ரா மகாலயக் கோயிலின் கட்டுமானத்தைத் தொடங்கினார். இளமை பருவத்தில், மன்னர் தனது தாய்மாமனைக் கொன்று, அவரது சிம்மாசனத்தைக் கைப்பற்றினார். மேலும் தனது தாயின் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்தார். வயதான காலத்தில் அவரது குற்றங்கள் அவரது மனதில் பெரும் பாரமாகத் தொங்கின. இதற்காக யாத்திரை மேற்கொண்டார். தொலைதூரத்திலிருந்து பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர்களில் ஒரு குழுவினருக்கு இவர் சிறீஸ்தலைக் கொடுத்தார். மேலும் தனது மகன் சாமுண்டராஜாவிடம் இராச்சியத்தை அளித்துவிட்டு (பொ.ஊ. 996) ஓய்வு பெற்றார். ஆனால் கோயில் வளாகம் பொ.ஊ. 1140 வரை முடிக்கப்படவில்லை.[2][3] மூலராஜா தனது முந்தைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக அங்கு ஒரு சன்னதியைக் கட்ட உத்தரவிட்டதாக காலனித்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.[1] ஆனால் அவரது ஆட்சிக்கு முன்பே அந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏற்கனவே இருந்த கட்டிடம் அகற்றப்பட்டு, தற்போதுள்ள அடித்தளத்தின் மேல் புதிய வளாகம் கட்டப்பட்டதாக தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.[4] 12 ஆம் நூற்றாண்டில், பொ.ஊ. 1140 இல், செயசிம்ம சித்தராசன் (1094–1144) கோயில் வளாகத்தை முழுமைப்படுத்தினார். பின்னர், இது சித்தபூரின் பிரதான கோயில் வளாகமாக மாறியது.[1][a][b]
பொ.ஊ. 1296 இல் (சம்வத் 1353) அலாவுதீன் கில்சி ஆலய வளாகத்தை அகற்ற உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கான் ஆகியோரின் கீழ் ஒரு இராணுவத்தை அனுப்பினார். இந்த கோயில் மேலும் அழிக்கப்பட்டு, அதன் மேற்கு பகுதி 1414 அல்லது 1415 இல் முசாபரித் வம்சத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆட்சியாளர் முதலாம் முகமது ஷா (1410–44) என்பவரால் அரச சபை பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.[5][6]
This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Burgess; Murray (1874). "The Rudra Mala at Siddhpur". Photographs of Architecture and Scenery in Gujarat and Rajputana. Bourne and Shepherd. p. 19. Retrieved 23 July 2016.