விகிதவியல் அளவுகளில் ருபீடியம் அயோடைடு மற்றும் வெள்ளி(I) அயோடைடு சேர்மங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு அவற்றை உருக்கியோ[2] அல்லது துகளாக அரைத்தோ[3] ருபீடியம் வெள்ளி அயோடைடைத் தயாரிக்கமுடியும். இதனுடைய மின்கடத்துகையின் அளவு ஒரு மீட்டருக்கு 25 சீமென் என்று அறியப்படுகிறது. அதாவது, 1×1×10 மி.மீ பார் (அளவை|பார்) அழுத்தத்தில் நீள் அச்சில் 400 ஓம்கள்மின்தடையைப் பெற்றிருக்கிறது.
நான்முக அயோடின்களின் தொகுப்பால் இதன் படிக அமைப்பு ஆக்கப்பட்டுள்ளது. வெள்ளி அயனிகள் உட்பரவுதலுக்கு ஏதுவாக இவற்றின் முகப்புகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன[4].
ருபீடியம் வெள்ளி அயோடைடு 1970 ஆம் ஆண்டில் மின்கலன்களுக்கான திண்ம மின்பகுளியாக பரிந்துரைக்கப்பட்டது. வெள்ளி மற்றும் ருபீடியம்அயோடைடுமின்முனைகள் இரண்டையும் இணைக்கும் இணையலாக இது பயன்படுத்தப்பட்டது[1].
ருபீடியம் வெள்ளி அயோடைடு குடும்பமானது பல சேர்மங்களால் ஆன குழு மற்றும் திண்மங்களின் கரைசல்களைக் கொண்டுள்ளது. இவை RbAg4I5 சேர்மத்துடன் ஆல்ஃபா நிலை மாறுபாடுகளுடன் சமபகுதிய அமைப்பைக் கொண்டுள்ளன. Ag+ மற்றும் Cu+ நேர்மின் அயனிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மீஉயர் அயனிக்கடத்திகளுக்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் கூறலாம் KAg4I5, NH4Ag4I5, K1−xCsxAg4I5, Rb1−xCsxAg4I5, CsAg4Br1−xI2+x, CsAg4ClBr2I2, CsAg4Cl3I2, RbCu4Cl3I2, KCu4I5 மற்றும் பல.[5][6][7][8]
↑Popov, A. S.; Kostandinov, I. Z.; Mateev, M. D.; Alexandrov, A. P.; Regel, Liia L.; Kostandinov; Mateev; Alexandrov; Regel (1990). "Phase analysis of RbAg4I5 crystals grown in microgravity". Microgravity Science and Technology3: 41–43. Bibcode: 1990MiST....3...41P.
↑Geller S., Akridge J.R., Wilber S.A. (1979). "Crystal structure and conductivity of the solid electrolyte α-RbCu4Cl3I2". Phys. Rev. B19 (10): 5396–5402. doi:10.1103/PhysRevB.19.5396. Bibcode: 1979PhRvB..19.5396G.
↑Hull S. Keen D.A., Sivia D.S., Berastegui P. (2002). "Crystal Structures and Ionic Conductivities of Ternary Derivatives of the Silver and Copper Monohalides – I. Superionic Phases of Stoichiometry MAg4I5: RbAg4I5, KAg4I5, and KCu4I5". J.Solid State Chemistry165 (2): 363–371. doi:10.1006/jssc.2002.9552. Bibcode: 2002JSSCh.165..363H.
↑Despotuli A.L., Zagorodnev V.N., Lichkova N.V., Minenkova N.A. (1989). "New high conductive CsAg4Br1−xI2+x (0.25 < x < 1) solid electrolytes". Sov. Phys. Solid State31: 242–244.
↑Lichkova N.V., Despotuli A.L., Zagorodnev V.N., Minenkova N.A., Shahlevich K.V. (1989). "Ionic conductivity of solid electrolytes in the two- and three-components AgX–CsX (X = Cl, Br, I) glass-forming systems". Sov. Electrochem.25: 1636–1640.