உருமாற்ற வளர்காரணி-ஆல்ஃபா (Transforming growth factor-alpha; TGF-α) சில மனித புற்று நோய்களில் அதிக அளவில் உள்ளது. பெருவிழுங்கிகள், மூளைச் செல்கள், மேல்தோல் அணுக்கள் (keratinocytes) ஆகியவற்றால் உருவாக்கப்படும் உருமாற்ற வளர்காரணி-ஆல்ஃபா புறத்திசு வளர்ச்சியைத் தூண்டுகிறது. புறத்தோல் வளர் காரணியுடன் நெருங்கிய தொடர்புடைய இக் காரணி புறத்தோல் வளர்காரணி ஏற்பியுடன் இணைந்து ஒத்த விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இக் காரணி பாதிப்படைந்த வளர்ந்த மூளையில் நரம்பணுக்களின் பெருக்கத்தை தூண்டுகிறது[1].