உரோடெரிக் ஆலிவர் இரெட்மன்

உரோடெரிக் ஆலிவர் இரெட்மன்
Roderick Oliver Redman
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்புனித யோவான் கல்லூரி கேம்பிரிட்ச்
விருதுகள்அரசு கழக உறுப்பினர்[1]

உரோடெரிக் ஆலிவர் இரெட்மன் (Roderick Oliver Redman)[1] (1905–1975) பிரித்தானிய வானியலாளரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் ஆவார்.[2][3]

கல்வி

[தொகு]

இவர் கிளவுசெசுடெர்சயரின் சுட்ரவுடு அருகில் உள்ள உரோடுபரோவில் பிறந்தார். இவர் மார்லிங் பள்லியிலும் கேம்பிரிட்ஜ் புனித யோவான் கல்லூரியிலும் கல்விகற்றார்.

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் 1947 முதல் 1972 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வான்காணகங்களின் இயக்குநராக விளங்கினார். இவர் 1928 முதல் 1931 வரை விக்டோரியாவில் அமைந்த டொமினியம் வானியற்பியல் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்ழகத்துக்குச் சென்று அங்கே 1931 முதல் 1937 வரைசூரிய இயற்பியல் வான்காணகத்தின் உதவி இயக்குநராக விளங்கினார். இவர் 1939 முதல் 1947 வரை தென்னாப்பிரிக்காவில் பிரிடோரியவுக்கு வெளியே அமைந்த ஆக்சுபோர்டு இரெட்கிளிஃப் வான்காணகத்திப்முதன்மை உதவியாளராக இருந்தார்.[4] இவரது முனைவர் பட்ட மாணவர்களாக ஜான் அட்சிங்சு, காலின்சுகார்ப்பே கோர்டான் வாக்கர் ஆகியோர் விளங்கினர். இவர் 1931 இல் ஆர்த்தர் எடிங்டன் நெறியாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.[5][6] இவர் 1946 இல் அரசு கழக உருப்பினர்ரகத் தேர்வு செய்யப்பட்டார்.[1]

இவர் 1947 முதல் 1972 வரை கூட்டாக பல வான்காணகங்களுக்கு இயக்குநராக இருந்தார். இவர் 1959 முதல் 1961 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார். இவரது நினைவாக 1993 PE (7886 இரெட்மன்) எனும் குறுங்கோள் இரசல் ஆர்மண்டு இரெட்மன் என்பவருடன் இணைந்து பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னவர் இவரோடு டொமினியன் வானியற்பியல் வான்காணகத்தில் பணியாற்றியதைத் தவிர வேறுகாரணம் ஏதும் இணைபெயரீட்டிற்கு இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Griffin, R. F.; Woolley, R. (1976). "Roderick Oliver Redman. 17 July 1905 -- 6 March 1975". Biographical Memoirs of Fellows of the Royal Society 22: 334. doi:10.1098/rsbm.1976.0015. 
  2. Canadian Astronomical Society
  3. "Bio at CAS". Archived from the original on 2009-02-01. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.
  4. SAAO பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம் Radcliffe Observatory
  5. "Astrophysics at Cambridge : Dr. R. O. Redman, F.R.S". Nature 159 (4040): 463–460. 1947. doi:10.1038/159463c0. Bibcode: 1947Natur.159S.463.. 
  6. "Roderick O. Redman, FRS". Nature 254 (5498): 371–370. 1975. doi:10.1038/254371a0.