உறையிடும் வளையம் (Inoculation loop)(படலமிடும் வளையம் உறையிடும் கம்பி, அல்லது நுண் கிறுக்கி) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நுண்ணுயிரியல் வல்லுநர்களால் முக்கியமாக நுண்ணுயிர் வளர்ப்பதற்கு உறை எனப்படும் நுண்ணுயிரிகளின் சிறிய மாதிரியை எடுத்து வளர் ஊடகத்திற்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு எளிய கருவியாகும்.[1][2]
இக்கருவி ஒரு மெல்லிய கைப்பிடியைக் கொண்டுள்ளது. இதன் ஓர் முனையில் 5 மி.மீ. அகலம் அல்லது சிறியது அளவிலான மெல்லிய கம்பி உள்ளது. இது முதலில் முறுக்கப்பட்ட உலோகக் கம்பியால் ஆனது. இதற்குப் பிளாட்டினம், தங்குதன் அல்லது நிக்ரோம் போன்றவை பயன்படுத்தப்பட்டன. ஆனால் செலவினைக் குறைக்கவும் சுத்தத்தினைப் பேணவும் வார்ப்பட நெகிழி இப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.