![]() | |
உருவாக்கம் | 1987 |
---|---|
வகை | வணிகச் சங்கம் |
சட்ட நிலை | செயலில் |
தலைமையகம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
சேவை பகுதி | உலகம் முழுவதும் |
வலைத்தளம் | https://www.gold.org/ |
உலக தங்கக் குழு (World Gold Council), தங்க தொழில்துறைக்கான பன்னாட்டு வர்த்தக சங்கமாகும் . இது இலண்டனை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா , சீனா , சிங்கப்பூர் , ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[1]இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உலகம் முழுவதும் தங்கச் சுரங்க நிறுவனங்களைக் கொண்டுள்ளனர்.[2].சந்தை மேம்பாட்டின் மூலம் தங்கத்திற்கான தேவையைத் தூண்டுவதும், நிலை நிறுத்துவதும் இதன் நோக்கமாகும் . [3]
உலக தங்க கவுன்சில் 1987ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நிறுவனமான இண்டர்கோல்டுடன் ஒன்றிணைந்து அதன் பன்னாட்டு அலுவலகங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பல நாடுகளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தங்கம் இறக்குமதி தடைசெய்யப்பட்டது.[4][5][6]
இது தங்கத்திற்கான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுதல், தங்கப் பத்திரங்கள் வெளியிடுதல், இந்தியா மற்றும் சீனாவில் தங்கக் குவிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தல், [7] மற்றும் அதன் நிறுவன செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஆவணங்களையும் வெளியிடும் பணி மேற்கொள்கிறது.[8]