உலு திராங்கானு (P038) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Hulu Terengganu (P038) Federal Constituency in Terengganu | |
உலு திராங்கானு மக்களவைத் தொகுதி (P038 Hulu Terengganu) | |
மாவட்டம் | உலு திராங்கானு மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 88,484 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | உலு திராங்கானு தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா பேராங், உலு திராங்கானு மாவட்டம் |
பரப்பளவு | 3,973 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | ரொசுல் வாகிது (Rosol Wahid) |
மக்கள் தொகை | 91,855 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
உலு திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hulu Terengganu; ஆங்கிலம்: Hulu Terengganu Federal Constituency; சீனம்: 乌鲁登嘉楼国会议席) என்பது மலேசியா, திராங்கானு, உலு திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P038) ஆகும்.[8]
உலு திராங்கானு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து உலு திராங்கானு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
உலு திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் உட்புறத்தில் உள்ளது.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா பேராங். மாநிலத் தலைநகரான கோலா திராங்கானுவில் இருந்து சுமார் 40 கி.மீ. (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
நிலப்பரப்பின் அடிப்படையில் உலு திராங்கானு மிகப்பெரிய மாவட்டம். இது திராங்கானு மாநிலத்தில் கடலை ஒட்டி இல்லாத ஒரே மாவட்டமாகும். மலேசிய உள்ளாட்சி சட்டம் 1976 (சட்டம் 171) (திருத்தம் 1978)-இன் 3-ஆவது பிரிவின் கீழ் (3rd Section of Local Government Act 1976 (Act 171) (Amendment 1978); 1 சனவரி 1981-இல் உலு திராங்கானு மாவட்ட மன்றம் நிறுவப்பட்டது.
இதற்கு முன் இந்த மாவட்டம் பண்டாரான் உலு திராங்கானு (Bandaran Ulu Terengganu) என்று அழைக்கப்பட்டது. 1982 ஆகத்து மாதம் 30-ஆம் தேதி, முன்னாள் திராங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் அகமத் அவர்களால், புதிய மாவட்ட மன்றம் முறையாகத் தொடங்கப்பட்டது.
உலு திராங்கானு மாவட்டத்தில் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பழங்குடியினருக்கு ஒரு கிராமம் உள்ளது. அதன் பெயர் கம்போங் சுங்கை பேருவா (Kampung Sungai Berua).[10]
உலு திராங்கானு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் உலு திராங்கானு தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
உலு திராங்கானு | ||||
4-ஆவது மக்களவை | P030 | 1974–1978 | எங்கு முசைன் அப்துல் காதிர் (Engku Muhsein Abdul Kadir) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அலியாஸ் அலி (Alias Ali) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
உலு திராங்கானு | ||||
7-ஆவது மக்களவை | P035 | 1986–1990 | அலியாஸ் அலி (Alias Ali) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P038 | 1995–1999 | முசுதபா மூடா (Mustafa Muda) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகைதீன் அப்துல் ரசீத் (Muhyidin Abdul Rashid) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | தெங்கு புத்ரா தெங்கு ஆவாங் (Tengku Putera Tengku Awang) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முகமது நோர் ஒசுமான் (Mohd Nor Othman) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | சைலானி ஜொகாரி (Jailani Johari) | ||
14-ஆவது மக்களவை | 2018 | ரொசுல் வாகிது (Rosol Wahid) | ||
2018–2019 | சுயேச்சை | |||
2019–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | ரொசுல் வாகிது (Rosol Wahid) |
42,910 | 59.59% | + 14.59% | |
பாரிசான் நேசனல் | ரோசி மாமத் (Rozi Mamat) |
27,176 | 37.74% | - 11.86% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | அலியாஸ் இசுமாயில் (Alias Ismail) |
1,740 | 2.42% | - 2.98% ▼ | |
தாயக இயக்கம் | முகமது காத்ரி அப்துல்லா (Mohd Khadri Abdullah) |
182 | 0.25% | + 0.25% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 72,008 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 793 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 169 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 72,970 | 81.90% | - 4.41% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 87,917 | ||||
பெரும்பான்மை (Majority) | 15,734 | 21.85% | + 17.25% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |