உலு லங்காட் (P101) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Hulu Langat (101) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | உலு லங்காட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | அம்பாங்; செராஸ்; காஜாங் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | முகமது சானி ஹம்சான் (Mohd Sany Hamzan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 171,719 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 620 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
உலு லங்காட் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Hulu Langat; ஆங்கிலம்: Hulu Langat Federal Constituency; சீனம்: 乌鲁冷岳联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட்மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P101) ஆகும்.
உலு லங்காட் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. உலு லங்காட் மக்களவைத் தொகுதியில் 1974-ஆம் ஆண்டில் அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1974-ஆம் ஆண்டில் இருந்து அம்பாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
உலு லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டம்; நெகிரி செம்பிலான்; சிலாங்கூர் மாநிலங்களுக்கும் இடையில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டமாகும்.
இந்த மாவட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறக் குடியேற்றங்களின் கலவையாகக் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்கள் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள நகரங்களில் குடியேறுகின்றனர். செராஸ், அம்பாங் போன்ற மக்கள் தொகை மையங்கள் பெருநகரப் பகுதிகளின் புறநகர்ப் பகுதிகளாக மாறி வருகின்றன.
உலு லங்காட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
(லங்காட்; செதாபாக் மக்களவை தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
உலு லங்காட் தொகுதி | ||||
4-ஆவது | P078 | 1974–1978 | லீ சியோக் இயூ (Lee Siok Yew) |
பாரிசான் நேசனல் (மசீச) |
5-ஆவது | 1978–1982 | ரோஸ்மேரி சோ போ கெங் (Rosemary Chow Poh Kheng) | ||
6-ஆவது | 1982–1986 | |||
உலு லங்காட் தொகுதி | ||||
7-ஆவது | P089 | 1986–1990 | Lee Kim Sai (லீ கிம் சாய்) |
பாரிசான் நேசனல் (மசீச) |
8-ஆவது | 1990–1995 | |||
9-ஆவது | P093 | 1995–1999 | பத்ருல் இசாம் அப்துல் அசீஸ் (Badrul Hisham Abdul Aziz) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது | ||||
11-ஆவது | P101 | 2004–2008 | மார்க்கிமன் கோபிரான் (Markiman Kobiran) | |
12-ஆவது | 2008–2013 | செ ரோசாலி செ மாட் (Che Rosli Che Mat) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018–2022 | அசானுதீன் முகமது யூனுஸ் (Hasanuddin Mohd Yunus) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | |
15-ஆவது | 2022–தற்போது | முகமது சானி அம்சான் (Mohd Sany Hamzan) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
166,902 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
138,339 | 82.89% | ▼ 5.22 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
136,786 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
339 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,214 | - | - |
பெரும்பான்மை (Majority) |
14,896 | 10.89% | ▼ 17.92 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
முகமது சானி அம்சான் (Mohd Sany Hamzan) |
பாக்காத்தான் (PH) | 58,382 | 42.68% | -12.85 ▼ | |
முகமது ரட்சி அப்துல் லத்தீப் (Mohd Radzi Abd Latif) |
பெரிக்காத்தான் (PN) | 43,486 | 31.79% | +31.79 | |
ஜொகான் அப்துல் அசீஸ் (Johan Abd Aziz) |
பாரிசான் (BN) | 32,570 | 23.81% | -2.90 ▼ | |
மார்க்கிமன் கோபிரான் (Markiman Kobiran) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (PEJUANG) | 1,655 | 1.21% | +1.21 | |
அப்துல் ரகுமான் ஜாபர் (Abdul Rahman Jaafar) |
சபா பாரம்பரிய கட்சி (Sabah Heritage Party) |
370 | 0.27% | +0.27 | |
முகம்மது நோர்தீன் அகமது முசுதபா (Mohamed Noortheen Ahamed Mustafa) |
சுயேச்சை | 326 | 0.24% | +0.24 |