![]() உலு லங்காட் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர் | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°05′N 101°50′E / 3.083°N 101.833°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
தொகுதி | பண்டார் பாரு பாங்கி |
நகராட்சி | காஜாங் நகராட்சி (தென்பகுதி) அம்பாங் ஜெயா நகராட்சி (வட பகுதி) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுல்கிப்லி காலிட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 829.44 km2 (320.25 sq mi) |
மக்கள்தொகை (2020)[1] | |
• மொத்தம் | 14,00,461 |
• அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43xxx, 55xxx, 56xxx, 68xxx |
தொலைபேசி எண்கள் | +6-03-4, +6-03-8, +6-03-9 |
வாகனப் பதிவெண்கள் | B |
உலு லங்காட் மாவட்டம் (மலாய்:Daerah Hulu Langat; ஆங்கிலம்:Hulu Langat District; சீனம்:乌鲁冷岳县) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மாநகருக்கும்; நெகிரி செம்பிலான்; சிலாங்கூர் மாநிலங்களுக்கும் இடையில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டமாகும்.
2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (தற்காலிக முடிவு) இந்த மாவட்டம் 840 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், 1,400,461 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. உலு லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டம் ஆகும்.
இந்த மாவட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறக் குடியேற்றங்களின் கலவையாகக் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்கள் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள நகரங்களில் குடியேறி வருகின்றனர். செராஸ், அம்பாங் போன்ற மக்கள் தொகை மையங்கள் பெருநகரப் பகுதிகளின் புறநகர்ப் பகுதிகளாக மாறின.
செராஸ் மற்றும் அம்பாங் இரண்டும் இப்போது கோலாலம்பூர் கூட்டாட்சி பிராந்தியத்திற்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் இடையில் நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி மாநில மற்றும் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது உலு லங்காட் மாவட்டம் வறுமை விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் ஆகும்.[2]
மலேசியாவின் மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பின் படி, உலு லங்காட் மாவட்டத்தின் மக்கள் தொகை 1980-ஆம் ஆண்டில் 177,900; 1991-ஆம் ஆண்டில் 413,900; 2000-ஆம் ஆண்டில் 864,451. மேலும் 2010-ஆம் ஆண்டில் மக்கள் தொகை வெளிநாட்டவர்களைத் தவிர்த்து 1,067,744 ஆக அதிகரித்துள்ளது.[3][4]
2010-ஆம் ஆண்டின் மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பூமிபுத்ரா இனக் குழுவினர் 52.1% விழுக்காடு; மலேசிய சீனர்கள் 33.3% விழுக்காடு; மலேசிய இந்தியர்கள் 10.7% விழுக்காடு; மற்ற இனக் குழுவினர் 1.0% விழுக்காடு.
உலு லங்காட் மாவட்டம் 7 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
இந்த மாவட்டத்தின் வழியாக அண்மையில் திறக்கப்பட்ட எம்.ஆர்.டி. சுங்கை பூலோ-காஜாங் (Sungai Buloh-Kajang Line) பேருந்துச் சேவை இயங்குகின்றது. இதற்கு முன்பு எந்தத் தொடருந்துச் சேவையும் சேவையில் இல்லை.
இந்த தொகுதியில் கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை (Kuala Lumpur–Seremban Expressway), காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை (Cheras–Kajang Expressway) மற்றும் காஜாங் அதிவேக நெடுஞ்சாலை (Kajang Dispersal Link Expressway) (சில்க் நெடுஞ்சாலை) என்பன பிற முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு அத்தியாவசிய இணைப்புகளுடன் சேவை செய்கின்றன.
உலு லங்காட் நகரம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காகவும், இயற்கை சூழல்களுக்காகவும் விரும்பப் படுகின்றது. கோலாலம்பூர் நகருக்கு அருகில் இருப்பதால் உலு லங்காட் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான பிரபலமான இடமாகும். சுற்றுச்சூழல் சுற்றுலாவின் பிரபலமான இடங்களில் சுங்கை கபாய் நீர்வீழ்ச்சி (Gabai Falls), செமினி நீர் நீர்த்தேக்கம் மற்றும் சொங்காக் நதி வன பொழுதுபோக்கு மையம் (Congkak River Forest Recreational Center) ஆகியவை அடங்கும்.
லெம்பா பாங்சூன் (Lembah Pangsun) அருகே நுவாங் மலை (1,483 மீ) உள்ளது. இங்கு ஓட்டப் பந்தய வீரர்கள் கினாபாலு மலையை ஏறும் முன் அல்லது மராத்தான் நெடுந்தூர ஓட்டம் ஓடுவதற்கு முன் ஒரு பயிற்சி மைதானம் அமைந்துள்ளது. பலகோங்கில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடிக்கடி வரும் பல்வேறு வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.