உலூய்கி லூசியானி (Luigi Luciani) ஓர் இத்தாலிய நரம்பியல் விஞ்ஞானி ஆவார். [1] இவர் ஆசுகோலி பிசெனோ நகரத்தில் 1842 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் பிறந்தார். இலண்டன் இராயல் கழகத்தில் உறுப்பினராகவும் இவர் இருந்தார். கரேல் பிரடெரிக் வெங்க்பேக் பணியாற்றிய இதயத்தின் இரண்டாம் நிலை மேற்கீழறை அடைப்பு தொடர்பாக இவரும் பங்களித்தார். வெங்க்பேக் இந்த தொகுதியின் கால கட்டத்தை "லூசியானி கால இடைவெளி" என்று விவரித்தார்.[2]
1919 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் நாள் காலமானார்.