உல்கா குப்தா

உல்கா குப்தா
ஜான்சி ராணியில் உல்கா குப்தாவும் கிரத்திக்கா செங்கரும்
பிறப்பு12 ஏப்ரல் 1997 (1997-04-12) (அகவை 27)
சஹர்சா, பீகார்
தேசியம்இந்தியர்
பணிநடிகை

உல்கா குப்தா (Ulka Gupta, பிறப்பு: ஏப்ரல் 12, 1997, சஹர்சா, பீகார்) என்பவர் ஓர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை. இவர், மனுபாய்(ராணி லட்சுமிபாயின் சிறு வயதுத் தோற்றம்) என்ற கதாபாத்திரத்தில் ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை என்ற தொடரில் நடித்ததால் பிரபலமானார்.[1] கிரத்திக்கா செங்கர் என்பவர், ராணி லட்சுமிபாயாகத் தோன்றும் வரை, இவர் அக்கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, காளி என்ற கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார். அது ஒரு புரட்சிப் பெண்ணின் வேடம்.

தொழில்

[தொகு]

ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை தொடரில் உல்கா குப்தாவினுடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. மற்றும் மனுபாய் என்ற கதாபாத்திரத்திற்காகப் பல விருதுகளை வென்றுள்ளார். அதே தொடரில் மீண்டும் காளி என்ற பெயரில் புரட்சிப் பெண்ணாகவும் வந்தார். அதன் பிறகு உல்கா குப்தா, கலர்ஸ் தொலைக்காட்சியில், புல்வா என்ற தொடரில் நடித்தார். புல்வாவிற்கு பிறகு, அவர் இப்போது ரக்மா என்ற வேடத்தில் வீர சிவாஜி தொடரில், கலர்ஸ் தொலைக்காட்சிக்காக நடித்து வருகிறார்.

விருதுகள்

[தொகு]
  • இந்திய டெலி விருதுகள்-மிகவும் பிரபல்யமான குழந்தைக் கலைஞர் (2010)
  • ஜீ ரிஷ்தே விருதுகள்-மிகவும் பிரபல்யமான கதாபாத்திரத்துக்குச் சிறப்பு விருது (2010)
  • எவ். ஐ. சி. சி. ஐ. விருது-ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் (2010)
  • பெண் சாதனையாளர் விருது-சிறந்த நடிகை (2010)
  • ஜீ தங்க விருதுகள்-ஆண்டின் சிறந்த கலைஞர் (2010)

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]