உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973

மிசா (MISA) என்று பரவலாக அறியப்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.[1]

இந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது.

இச்சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் களத்தில் தங்களது அணிக்கு எதிரணியால் ஏற்படும் போட்டியினை சமாளிக்கவேப் பயன்படுத்தினர்.[2]

நெருக்கடி நிலையின் பொழுது

[தொகு]

நெருக்கடி நிலை அறிவிப்பின்போது (1975-1977) ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளானார்கள். பல சட்டமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும், இந்திரா காந்தியின் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைதானார்கள். அதில் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சியான ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.

உருவாக்கம்

[தொகு]

இந்திய அரசியலமைப்பின் 39 வது திருத்தச் சட்டமாக 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இச்சட்டம் சேர்க்கப்படுவதற்கு முன் இச்சட்ட வடிவை நீதிமுறைமையின் பரிசீலணைக்கு அனுப்பாமலேயே, இந்திய அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று தெரிந்த நிலையிலேயே, இந்திய அடிப்படை கட்டமைவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டது.

நீக்கம்

[தொகு]

இச்சட்டம் 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியினைத் தொடர்ந்து இந்தியாவின் ஆளுமைக்கு வந்த ஜனதா கட்சியினரின் ஆளுமை அரசு கொண்டு வந்த 42 வது திருத்தச் சட்டம் 1978 இன்படி, அதன் 9 வது அட்டவணையிலிருந்து, இச்சட்டத்தினை நீக்கம் செய்தது.

சிறை சென்றவர்கள்

[தொகு]

இச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களில் சில முக்கியமானவர்கள்-;

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ganguly, Sumit; Diamond, Larry; Plattner, Marc F. (13 August 2007). The State of India's Democracy. JHU Press. pp. 130–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8791-8.
  2. Harding, Andrew; Hatchard, John (1993). Preventive Detention and Security Law: A Comparative Survey. Martinus Nijhoff Publishers. pp. 61–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-2432-3.