உள்ளத்தை அள்ளித்தா Ullathai Allitha | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | என். பிரபாவதி என். சோதிலட்சுமி என். விஷ்ணுராம் என். ரகுராம் |
திரைக்கதை | சுந்தர் சி. |
வசனம் | கே. செல்வபாரதி |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில்குமார் |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு |
கலையகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
விநியோகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 15, 1996 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உள்ளத்தை அள்ளித்தா (Ullathai Allitha) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறப்பான வெற்றித் திரைப்படமான இப்படம் சிற்பி இசையமைப்பில் பழனி பாரதி பாடல்களை எழுதினார்.[1]
இப்படம் சபாஷ் மீனா மற்றும் இந்தி மொழியில் வந்த 'அந்தாஸ் அப்னா அப்னா' போன்ற திரைப்படங்களைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.