உள்ளம் கொள்ளை போகுதே | |
---|---|
![]() | |
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் |
கதை | முகில் |
திரைக்கதை | சுந்தர் சி |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | பிரபுதேவா கார்த்திக் அஞ்சலா ஜவேரி விவேக் தீபா வெங்கட் |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | இலட்சுமி மூவி மேக்கர்சு |
விநியோகம் | இலட்சுமி மூவி மேக்கர்சு |
வெளியீடு | பிப்ரவரி 9, 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உள்ளம் கொள்ளை போகுதே (Ullam Kollai Poguthae) என்பது 2001 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபுதேவா, கார்த்திக், அஞ்சலா ஜவேரி, விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.[1] இயக்குநர் சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
கார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் பா. விஜய், மற்றும் கலைக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "அடடா அடடா" | பா. விஜய் | ஹரிஹரன், கார்த்திக் ராஜா | 1:09 | ||||||
2. | "அன்பே அன்பே" | பா. விஜய் | உன்னிகிருஷ்ணன் | 5:03 | ||||||
3. | "அஞ்சல அஞ்சல" | கலைக்குமார் | தேவன், ஹரிணி | 4:22 | ||||||
4. | "கதவை நான்" | பா. விஜய் | ஹரிஹரன், கார்த்திக் ராஜா | 1:08 | ||||||
5. | "கவிதைகள் சொல்லவா" | பா. விஜய் | ஹரிஹரன் | 5:31 | ||||||
6. | "கிங்குடா" | கலைக்குமார் | பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, மனோ | 4:12 | ||||||
7. | "ஒரு பாலைவனத்தை" | பா. விஜய் | ஹரிஹரன் | 0:27 | ||||||
8. | "உயிரே என் உயிரே" | பா. விஜய் | ஹரிஹரன் | 2:01 | ||||||
மொத்த நீளம்: |
29:38 |