உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | ஹொன்னப்ப பாகவதர் லலிதாகால் பிலிம்ஸ் |
கதை | கதை எஸ். அய்யாபிள்ளை |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | பிரேம்நசீர் ஓ. ஏ. கே. தேவர் ராஜகோபாலன் டி. பாலசுப்பிரமணியம் கருணாநிதி ஈ. வி. சரோஜா ஜமுனாராணி ராஜேஸ்வரி எம். என். ராஜம் கண்ணாம்பா |
வெளியீடு | சூன் 26, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 15518 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
தனது கணவன் இறந்த பின்னர் ஒரு ஏழைப் பெண்ணொருத்தி தன் இரு மகன்களை ஆளாக்க பாடுபடுகிறாள். மூத்த மகனை ஆலை உரிமையாளர் ஒருவர் தத்தெடுத்து வளர்க்கிறார். பின்னர்,அவன் அந்த ஆலைக்கு முதலாளி ஆகின்றான். அவளது இளைய மகன் அந்த ஆலையிலேயே தொழிலாளியாக பணிபுரிகிறான். ஆனால் இருவருக்குமே தாங்கள் சகோதரர்கள் எனத் தெரியாது. இருவரும் ஒரே பெண்ணை நேசிக்கின்றனர். இதனால் அண்ணன் தனது தம்பியை வேலையிலிருந்து அனுப்பி விடுகிறான், தம்பியானவன் தனது தாயுடன் சேர்ந்து சிறு நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறான் ,நாளடைவில் வளர்ச்சியடைகிறான். ஆலைத்தொழிலாளிகள் பலரும் அவனது வயலில் வேலை செய்ய வருகிறார்கள். மூத்தவன் அவனது வயல்வெளிகளை நாசம் செய்ய நினைக்கிறான். அந்தப் பெண்ணிற்கு அண்ணனின் இச் செயல் பிடிக்கவில்லை, தம்பிக்கு தகவல் அளித்ததால் தொழிலாளிகள் உயிர் தப்பினர். அண்ணனின் எண்ணம் ஈடேறியதா?, வயல்வெளி என்னவாயிற்று?, இருவரும் இணைந்தனரா? என்பது மீதிக்கதையாகும்.[2]
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, கண்ணதாசன், டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், சி. எஸ். பாண்டியன், ஏ. எல். ராகவன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]
எண். | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | தந்தனத்தோமென்று சொல்லியே வில்லுப்பாட்டு |
குழுவினருடன் சி. எஸ். பாண்டியன் | கண்ணதாசன் |
2 | கன்னியரே கன்னியரே | குழுவினருடன் எல். ஆர். ஈஸ்வரி | |
3 | காய் காய் அவரைக் காய் | எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. எல். ராகவன் | |
4 | ஐ கம் ஃப்ரம் பாரிஸ் | குழுவினருடன் பி. சுசீலா & ஏ. எல். ராகவன் | அ. மருதகாசி |
5 | சின்ன இடை ஒடிந்திடவே | குழுவினருடன் கே. ஜமுனாராணி & எல். ஆர். ஈஸ்வரி | |
6 | ஆசை நெஞ்சமே பொறுப்பாய் | கே. ஜமுனாராணி | |
7 | ஓ! சிங்காரப் பூஞ்சோலை | சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனாராணி | |
8 | மானமே பெரிதென்றே | பி. லீலா | |
9 | உழவுக்கும் தொழிலுக்கும் | குழுவினருடன் எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி | |
10 | கோவிச்சுக்கிறாப்பல கோவிச்சுக்காதே | எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. ஜி. ரத்னமாலா | டி. கே. சுந்தர வாத்தியார் |