உவாங் பாமெய் | |
---|---|
![]() 1938 களில் உவாங் பாமெய் | |
பட்டப்பெயர்(கள்) | இரண்டு துப்பாக்கிகள்[a] |
பிறப்பு | 1906 சின்சான் மாகாணம், சியாங்சு, சீனா |
இறப்பு | 4 மே 1982 தாய்பெய், தைவான் | (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–75–76)
சார்பு | சீனக் குடியரசு (நிலையற்றது) |
உவாங் பாமெய் [3] ( Huang Bamei) ( 1906 – 4 மே 1982 ), உவாங் பெய்மெய்[4][5] அல்லது உவாங் பீமெய்[2] என்றும் அழைக்கப்படும் இவர், இரண்டாம் சீன-சப்பானியப் போரிலும் ( 1937-1945) மற்றும் சீன உள்நாட்டுப் போரின் (1945-1949) இரண்டாம் கட்டத்திலும் சீனக்குடியரசுடன் இணைந்து கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய ஒரு சீன கடற் கொள்ளைக் கூட்டத் தலைவியாவார்.[6] ஆனால் இவரது விசுவாசம் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இவரது அதிகாரத்தின் உச்சத்தில், இவர் 50,000 பேர் மற்றும் 70 கப்பல்கள்[2][4] கொண்ட ஒரு படைக்கு தலை தாங்கினார். மேலும் சீனாவின் மிகவும் பிரபலமான கடற்கொள்ளையர் என்றும் கருதப்பட்டார்.[4] போரில் இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் "இரண்டு துப்பாக்கிகள்" [a] என்ற புனைப்பெயரையும் பெற்றார்.[1]
சாங்காய் அருகே[7] ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த உவாங்,[7] சிறுவயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். உப்பைக் கடத்திக் கொண்டு செல்வதற்கும் அதனை விற்பதற்கும் தனது தந்தைக்கு உதவினார். 1931 இல் தனது திருட்டு வாழ்க்கையைத் தொடங்கினார். சியாங்சு மற்றும் செஜியாங் மாகாணங்களின் கடற்கரையோரங்களில் செயல்பட்டர். 1933 இல் இவர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உவாங் குடும்பத்தினரின் தலையீடு மற்றும் அதிகாரிகள் மத்தியில் அவர்களுக்கிருந்த தொடர்புகள் மூலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1937 இல் இரண்டாம் சீன-சப்பானியப் போர் வெடித்த பிறகு, [[கரந்தடிப் போர் முறை|கரந்தடிப் போர்] நோக்கங்களுக்காக தேசிய புரட்சிகர இராணுவத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூர் கும்பல் தலைவர்களில் உவாங் இருந்தார். போர் முழுவதும் இவரது விசுவாசம் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. போரில் அதிகார சமநிலை மாறும்போது சீனா, சப்பான் மற்றும் பல்வேறு உள்ளூர் குழுக்களுக்கு இடையே அடிக்கடி தன்னை மாற்றிக் கொண்டார். 1940 முதல் இவர் சீன இராணுவத்திற்காக மிகவும் நம்பகத்தன்மையுடன் போராடினார். இவரது பங்கேற்பு பெரும்பாலும் கடற்கொள்ளைத் தாக்குதல்களாகவே இருந்தது.[8] இருப்பினும் இவர் போர்களில் பங்கேற்றார். ஆனாலும் அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனமாக உத்திசார் சேவைகள் அலுவலகத்தின் தொடர்பில் இருந்தார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு, உவாங் கடற்கொள்ளைக்குத் திரும்பினார். தாய் ஏரியைச் சுற்றி கொள்ளையில் ஈடுபட்டார். இருப்பினும் இவர் அரசாங்கப் படைகளால் தோற்கடிக்கப்பட்டார். மன்னிக்கப்பட்ட இவர் பின்னர் 1948 இல் சீன உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த சீனப் பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகப் போராட இராணுவத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். டாச்சென் தீவுகள் மற்றும் தைவானின் பாதுகாப்பிற்கு இவர் உதவினார். ஆனால் 1951 இல் நடுவண் ஒற்று முகமையின் வாய்ப்பை நிராகரித்த பின்னர் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகினார். பின்னர் தேசியவாத தலைவர் சங் கை செக்கின் மனைவி சூங் மெய்-லிங்கால் நிறுவப்பட்ட பெண்கள் அமைப்பில் செல்வாக்கு மிக்க உறுப்பினரானார். மேலும் தைவானில் அகதிகளை கவனித்துக்கொள்வதில் பணியாற்றினார்.