உஷா வர்மா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | ஹார்தோய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1963 அரித்துவார், உத்தராகண்டம் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | லால் பிகாரி |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
வாழிடம் | ஹார்தோய் |
As of 17 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
உஷா வர்மா (Usha Verma) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் 1998, 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராகப் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஹார்தோய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2002-இல் உத்தரப் பிரதேசச் சட்டப் பேரவைக்கு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-இல் முலாயம் சிங் யாதவ் அமைச்சரவையில் அமைச்சரானார்.[1][2][3] மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்மாய் லாலின் மருமகள் இவர். இவர் சிறையிலிருந்தபோது 1962-இல் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றதற்காகப் பிரபலமானவர்.
உஷா வர்மா 5 மே 1963 அன்று உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள அரித்துவாரில் பசந்த் குமார் மற்றும் உஷா வர்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ரூர்க்கியில் உள்ள எஸ்டி பட்டக் கல்லூரி மற்றும் பிஎஸ்எம் பட்டக் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் உஷா லால் பிஹாரியை 29 சனவரி 1988-இல் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்குச் சில வருடங்களில் ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.[4]
சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர், 1999-இல் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் 2004-இல் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் 2004 முதல் 2009 வரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[4]
பாடுவது, சமையல் செய்வது மற்றும் வண்ணம் தீட்டுவது போன்றவை இவரின் பொழுது போக்காகும். தாழ்த்தப்பட்ட, ஏழை குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் இவர் பாடுபடுகிறார். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிறந்த சமுதாயத்திற்காக இவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு விவசாயி, கட்டிடக் கலைஞர், அரசியல் மற்றும் சமூக சேவகர் மற்றும் வணிக நபராகவும் பணியாற்றுகிறார்.[5]