ஊடகம் தான் செய்தி (The medium is the message) என்பது மார்சல் மெக்லூவன் அறிமுகப்படுத்திய கருத்துரு ஆகும். செய்தியின் ஒரு பகுதியாக ஊடகமே பொதிவதால், ஒரு செய்தி எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதில் அதனைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் ஊடகமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1964 இல் வெளியான அவரது புகழ்பெற்ற நூலில் (Understanding Media: The Extensions of Man) இக்கருத்தாக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார்[1]. மெக்லூவன், செய்தியை விட அதனைக் கொண்டு வரும் ஊடகத்தையே கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது என்று கருதினார். ஒரு ஊடகம் அது கொண்டு வரும் செய்தியால் மட்டுமன்று அதன் வடிவத்தாலும் பண்புகளாலும் கூட சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.