ஊடுபாலின மக்கள் நிறப்புரி, பாலினச் சுரப்பிக் கழலை அல்லது பிறப்புறுப்புகள் போன்ற பாலியல் பண்புகளுடன் பிறக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றுப்படி ,"ஆண் அல்லது பெண் உடல்களின் பொதுவான இருபால் கருத்தமைவுடன் இது பொருந்துவது இல்லை" என்று கூறியது.[1]
ஊடுபாலின மக்கள் பிறப்பிலிருந்து களங்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக ஊடுபாலின மாறுபாடு தங்களிடத்தில் இருப்பதனை அவர்கள் உணரும் போது அவர்கள் இந்த சிக்கல்களைச் சந்திக்கின்றனர். சில நாடுகளில் (குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்) இதில் சிசுக்கொலை, கைவிடுதல் மற்றும் குடும்பங்களுக்கு களங்கம் ஏற்படுத்தல் ஆகியவை நிகழ்வுகள் நடப்பதனையும் இது உள்ளடக்குகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தாய்மார்கள் மாந்திரீகம் செய்வதாக குற்றம் சாட்டப்படலாம், மேலும் ஒரு ஊடுபாலின குழந்தையின் பிறப்பு ஒரு சாபமாக விவரிக்கப்படலாம்.[2][3][4]
ஊடுபாலின குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், தெளிவற்ற வெளிப்புற பிறப்புறுப்பு போன்றவைகளைக் கொண்டிருந்தால், சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலியல் பண்புகளுக்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சை அல்லது நாளமில்லாச் சுரப்பிகளை மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. இருப்பினும், இது தொடர்பான ஆதரங்கள் இல்லாமல் இருப்பதால் இவ்வாறு செய்வது சர்ச்சைக்குரியதாக கருதப்படுகிறது.[5] இத்தகைய சிகிச்சைகள் தடை செய்யப்படலாம்.[6] ஐ.நா. நிறுவனங்கள்,[7][8] ஆஸ்திரேலிய பாராளுமன்றம், [9] மற்றும் ஜெர்மன் மற்றும் சுவிஸ் நெறிமுறைகள் நிறுவனங்கள் ஆகியன இந்தப் பிரச்சினைகளை மனித உரிமை மீறல்களாக அங்கீகரித்துள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்குமுறையில் மனித உரிமைகள் பாதுகாப்பை செயல்படுத்துவதும் வேகமானது சற்று மெதுவாகவே நிகழ்கிறது 2011 ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் வோலிங் ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வழக்கை முதன்முறையாக வென்றார்.[10] ஏப்ரல் 2015 இல், பாலின உடற்கூறியல் மாற்றத்திற்கு உடன்படாத மருத்துவ தலையீடுகளை சட்டவிரோதமாக்கிய முதல் நாடாக மால்டா ஆனது.
வாழ்வதற்கான உரிமை, பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பு, சட்டம் மற்றும் இழப்பீடு தாக்கல் செய்ய, தகவல் அணுகல் மற்றும் சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பிற மனித உரிமைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் பெறுதல் ஆக்கியனவற்றை இது உள்ளடக்கியுள்ளது.[11] சில நாடுகள் தற்போது வரை ஊடுபாலின மக்களை பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கின்றன.[11]
மனித உரிமைகள் நிறுவனங்கள் மருத்துவ நடைமுறைகள் மற்றும் ஊடுபாலின மக்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய பிரச்சினைகள் குறித்து அதிக ஆய்வை மேற்கொண்டு வருவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. 2013 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச சோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டான் கிறிஸ்டியன் கட்டாசின் பாலினங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் எனும் ஆய்வில்[12][13] ஊடுபாலின மக்கள் உலகளவில் பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டறிந்தனர்:
ஐரோப்பிய கவுன்சில் ஊடுபாலின மக்களின் கவலையின் பல பகுதிகளை பின்வருமாறு விவரிக்கிறது.
வாழ்க்கைக்கு சம உரிமை மற்றும் தேவையற்றதாகக் கருதப்படும் சிகிச்சைகள் உட்பட அனுமதியின்றி நடத்தப்படும் மருத்துவ சிகிச்சைகளைத் தடுப்பது; இன்டர்செக்ஸை ஒரு குணப்படுத்தக்கூடிய மருத்துவ நிலை என்பதில் இருந்து நீக்குவது. சட்டத்தின் கீழ் சமமான சிகிச்சை, மற்ற வகுப்பினருக்கு வழங்கப்படும் சட்டங்கள் உட்பட அனைத்தும் சமமாக வழங்க்கப்படல். தகவல், மருத்துவ பதிவுகள், ஆலோசனை மற்றும் ஆதரவுக்கான அணுகல்; அதிகாரப்பூர்வ ஆவணங்களை விரைவாக அணுகுவதன் மூலம், பாலின அங்கீகாரத்தில் சுய நிர்ணயம் செய்தல்.[11]