ஊர்பா மனிதன் சிலை (Urfa man) (காலம்:கிமு 9,000) தற்கால துருக்கி நாட்டில் மேல் மெசொப்பொத்தேமியாவின் தென்கிழக்கே உள்ள பாலிக்கிகோல் எனுமிடத்திற்கு அருகே உள்ள தொல்லியற்களத்தை அகழ்வாய்வு செய்யும் போது 1993-இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1997-இல் ஆய்வு செய்யப்பட்டது.[1][2][3] ஊர்பா மனிதச் சிலை மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலமான கிமு 9,000 ஆகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய மனிதச் சிற்பங்களில் இதுவே முதலாவது ஆகும். [1][4][5][6] துருக்கியின் பெருவயிறு மலைக்கு அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுத்த தொல்பொருட்களில் ஒன்றாகும். [7]ஊர்பா மனிதச் சிலை 1.90 மீட்டர் உயரம் கொண்டது. [8] இச்சிலையின் குழி விழுந்த கண்கள் கருப்பாக உள்ளது.[6]இச்சிலை V-வடிவ கழுத்துப்பகுதியுடன் கூடியது[1][6] இச்சிற்பத்தின் இரண்டு கைகளும் முன்பகுதியில் கைகோர்த்தபடி உள்ளது.[1]