ஊர்மிளா உன்னி | |
---|---|
ஊர்மிளா உன்னி (வலது) தனது மகள் உத்தரா உன்னியுடன் (இடது) | |
பிறப்பு | சுவாதி ஊர்மிளா உன்னி 14 சூன் 1962 திருவல்லா, கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
செயற்பாட்டுக் காலம் | 1989 – தற்போது வரை |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | அங்கரத்து இராமுன்னி (தி. 1981) [1] |
பிள்ளைகள் | உத்தரா உன்னி |
உறவினர்கள் | சம்யுக்தா வர்மா |
ஊர்மிளா உன்னி (Urmila Unni) ஓர் பாரம்பரிய நடனக் கலைஞரும், மலையாள நடிகையும் ஆவார்.[2] இவரின் மகள் உத்தரா உன்னி இவரும் ஒரு நடிகை ஆவார்.[3] இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.மேலும் தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
திருவல்லா , நெடும்புரம் அரண்மனையில் கே. சி. அனுஜன்ராஜா கோட்டக்கல் கோவிலகம் மற்றும் நெடுபுரம் கொட்டாரத்தில் மனோரமா ஆகியோருக்கு மகளாக 1962 ஜூன் 14 இல் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார். இவரது ஆரம்பக் கல்வி திருச்சூர் குழந்தை இயேசு ஆங்கிலப் பள்ளியிலிருந்தது. பின்னர் ,திருச்சூர் சிறீ கேரள வர்மா கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் மோகினியாட்டம், பரதநாட்டியம், கதகளி, வீணை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். இவர் ஒரு ஓவியரும் ஆவார்.[4]
இவர் அங்காரத் ராமனுன்னி என்பவரை மணந்தார். நடிகையும் நடனக் கலைஞருமான உத்தரா உன்னி இவர்களது மகளாவார்.[5] தற்போது இவர்கள் எர்ணாகுளத்தில் உள்ள கடவந்த்ராவில் வசிக்கின்றனர். இவர்கள் பகுரைனில் "அங்கோபங்கா" என்ற நடனப் பள்ளியைத் தொடங்கியுள்ளனர்.[6] நடிகை சம்யுக்தா வர்மா இவரது மருமகள் ஆவார்.[7] ஊர்மிளா சினிமா கதை, பாஞ்சாலிகா போன்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் உள்ளார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)