எ லெட்டர் டு எ இந்து

எ லெட்டர் டு எ ஹிந்து (ஒரு இந்துவுக்கு ஒரு கடிதம்) என்பது லியோ டால்ஸ்டாய் அவர்களால் தாரக் நாத் தாஸ் அவர்களுக்கு 14 டிசம்பர் 1908ல் எழுதப்பட்ட ஒரு கடிதம்.[1]

தாரக் நாத் இந்திய விடுதலை போராட்டத்தில் உதவுமாறு டால்ஸ்டாய்க்கு எழுதிய இரண்டு கடிதங்களுக்கு பதிலாக வந்தது தான் இந்த கடிதம். "பிரீ ஹிந்துஸ்தான் (Free Hindustan)" எனும் இந்திய பத்திரிகையில் இந்த கடிதம் வெளியிடப்பட்டது. இந்த கடிதத்தை படித்த காந்திஜி இதை தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் வெளியிட எண்ணினார். அதற்காக டால்ஸ்டாயிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் எழுதினார். 1909ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்த காந்தி இந்த கடிதத்தை ஆங்கிலத்தில் இருந்து குஜராத்தியில் மொழிப்பெயர்த்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.[1]

இந்த கடிதத்தில் அன்பை அடிப்படையாகக் கொண்டுதான் தான் இந்தியா விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என டால்ஸ்டாய் கூறுகிறார். பல மதங்களும் அன்பை உணர்த்துபவை எனவே அஹிம்சை போராட்டங்கள் மூலமே வெற்றி பெற வேண்டும் என்கிறார். பிற்காலத்தில் அஹிம்சை அணுகுமுறையே 1947ல் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்தது.

மேலும் இந்த கடிதத்தில் சுவாமி விவேகானந்தர் பற்றியும் எழுதியுள்ளார். இந்த கடிதம், டால்ஸ்டாயின் புத்தகம் (The Kingdom of God Is Within You) மற்றும் அவரின் வழிகாட்டுதலே காந்திஜி அஹிம்சை எனும் அணுகுமுறையை விடுதலைக்காக உருவாக்க உதவியது.[1]

திருக்குறளைப் பற்றியும் இதில் டால்ஸ்டாய் கூறியுள்ளார். அதை 'ஹிந்து குறள்' என குறிப்பிட்டுள்ளார்.[2] இதுவே பின்னாளில் காந்தி திருக்குறளை சிறையில் இருக்கும் பொழுது படிக்க காரணம்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Parel, Anthony J. (2002), "Gandhi and Tolstoy", Meditations on Gandhi : a Ravindra Varma festschrift, New Delhi: Concept, pp. 96–112, retrieved 2012-09-08 {{citation}}: Unknown parameter |editors= ignored (help)
  2. Tolstoy, Leo (14 December 1908). "A Letter to A Hindu: The Subjection of India-Its Cause and Cure". The Literature Network. The Literature Network. Retrieved 12 February 2012. THE HINDU KURAL
  3. Mohan Lal (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. ISBN 978-81-260-1221-3. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

[தொகு]