துடுப்பாட்ட விளையாட்டில் எகிறி (Bouncer) என்பது பந்து வீச்சாளர் மட்டையாளரை நோக்கி வீசும் வீச்சின் ஒரு வகை முறையாகும். பொதுவாக விரைவு வீச்சாளர்களால் வீசப்படும் இந்தப் பந்தானது, மட்டையாளரின் தலை அளவிற்கு எகிறும்.
ஆடுகளத்தில் பந்தானது மட்டையாளரை இலக்காகக் கொண்டு துள்ளிச் சென்று மட்டையாளரின் இடுப்பிற்குக் கீழ் சென்றால் அது முறையான பந்தாகக் கருதப்படுகிறது. ஆனால் மட்டையாளரின் தலையினை இலக்காகக் கொண்டு வீசப்படும் பீமர் வகை வீச்சானது முறையற்ற பந்தாகக் கருதப்படுகிறது.
பொதுவாக இந்தவகைப் பந்துவீச்சானது விரைவு வீச்சாளர்களால் வீசப்படுகிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையேயான பிபிஎல் போட்டியின் போது, நேர்ச்சுழல் பந்துவீச்சாளரான கயஸ் அகமது 121 கிமீ / மணிநேர எகிறியை ரெனிகேட்ஸின் சோன் மார்சுக்கு வீசினார்.இந்தப் பந்தில் நாலோட்டங்கள் உதிரியாக வந்தது. [1]