எக்டர் பதக்கம் (Hector Medal) நியூசிலாந்து நாட்டின் இராயல் கழகம் வழங்கும் ஓர் அறிவியல் பதக்கமாகும். முன்னதாக இப்பதக்கம் எக்டர் நினைவுப் பதக்கம் [1] என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சர் யேம்சு எக்டர் eன்ற விஞ்ஞானியின் நினைவாக ஆராய்ச்சியாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு அறிவியல் துறைக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது.தற்போது நடைமுறையில் மூன்று அறிவியல் துறைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. வேதியியல், இயற்பியல், கணக்குமற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை இதில் அடங்கும். பெரும் விஞ்ஞான சாதனை அல்லது தொழில்நுட்ப தகுதியுடைய அறிவியல் நுட்பம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானி மற்றும் விஞ்ஞானத்தின் குறிப்பிட்ட கிளையின் முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் விஞ்ஞானி என்பன அளவுகோலகக் கருதப்பட்டு இப்பதக்கம் வழங்கப்படுகிறது[2]. முன்னதாக அறிவியலின் வேறு பிரிவுகளும் இப்பதக்கத்திற்காக கருத்திற் கொள்ளப்பட்டன. 1918 ஆம் ஆண்டில் தாவரவியல்., வேதியியல், இனப்பண்பாட்டியியல், ,நலப்பண்பியல், இயற்பியல்(கணிதம் மற்றும் வானசாதிதிரம்) மற்றும் விலங்கியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் இப்பதக்கம் வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இப்பதக்கம் வருடத்திற்கு இருமுறை வழங்கப்பட்டது. ஈப்பதக்கம் 2000,2002 மற்றும் 2004 ஆண்டுகளில் யாருக்கும் வழங்கப்படவில்லை. 2000, 2002,2004 ஆண்டுகளில் இப்பதக்கம் வழங்கப்படுகிறது.