எங்கள் அண்ணா | |
---|---|
இயக்கம் | சித்திக் |
தயாரிப்பு | விஜயகாந்த் |
கதை | சித்திக் கோகுல கிருஷ்ணன் (வசனம்) |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் பிரபுதேவா வடிவேல் பாண்டியராஜன் நமிதா சொர்ணமால்யா |
ஒளிப்பதிவு | ஆனந்தக்கூத்தன் |
படத்தொகுப்பு | டி.ஆர்.சேகர் கே. ஆர்.கௌரிசங்கர் |
கலையகம் | ஆண்டாள் அழகர் சினி கம்பைன்ஸ் |
வெளியீடு | சனவரி 14, 2004 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கள் அண்ணா (Engal Anna) என்பது 2004 ஆம் ஆண்டில் சித்திக் இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும்.[1][2] இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், பிரபுதேவா, வடிவேல்,பாண்டியராஜன், நமிதா, சொர்ணமால்யா, இந்திரஜா, லால், மணிவண்ணன், ஆனந்த் ராஜ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
இது 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானகிரோனிக் பேச்சிலர் படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் 14 சனவரி 2004 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[3]
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான முந்தைய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்ததை அடுத்து, மலையாளப் படமான 'கிரோனிக் பேச்சிலர்' படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்ய விஜயகாந்த் முடிவு செய்தார். கிரோனிக் பேச்சிலர் படத்தை இயக்கிய சித்திக், இந்த தமிழ் பதிப்பை இயக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க கார்த்திக்கை முதலில் சித்திக் அணுகினார், ஆனால் நடிகர் அதை நிராகரித்து அந்த பாத்திரம் பிரபுதேவாவுக்கு சென்றது.[4] முன்னதாக தெலுங்குப் படங்களில் நடித்த பைரவி, முன்னணி நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழில் அறிமுகமானார், மேலும் தனது பெயரை நமிதா என்று மாற்றிக்கொண்டார். இந்த படத்தில் முதல் படத்தில் நடித்த இந்திரஜா மீண்டும் தமிழ் பதிப்பில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்., மேலும் வடிவேல், பாண்டியராஜன், சொர்ணமால்யா, ஆனந்த் ராஜ் மற்றும் பாண்டியராஜன் ஆகியோருடன் துணை வேடங்களில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் படம் மூலம் மலையாள நடிகர் லால் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்.[1][2]
இந்த படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.[5]
பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ஆசை அரசா" | அனுராதா ஸ்ரீராம், சங்கர் மகாதேவன் | 4:56 | |||||||
2. | "காதல் துஷ்யந்த" | சுஜாதா மோகன், கார்த்திக் | 4:43 | |||||||
3. | "கால் கிலோ" | பிரசன்னா, பாப் ஷாலினி | 5:06 | |||||||
4. | "கொஞ்சி கொஞ்சி" | பி. ஜெயச்சந்திரன், கங்கா, திப்பு | 5:44 | |||||||
5. | "முதன் முதலாக" | ஹரிஹரன், சாதனா சர்கம் | 4:35 | |||||||
மொத்த நீளம்: |
21:43 |
எங்கள் அண்ணா படம் 14சனவரி 2004 அன்று தைப்பொங்கல் பாண்டியின் போது வெளியிடப்பட்டது.[3] இந்த படத்தின் விநியோக உரிமை ₹60 லட்சத்திற்கு விற்கப்பட்டது (2023 இல் ₹2.1 கோடி அல்லது US$270,000க்கு சமம்). இதே காலகட்டத்தில் வெளியான கோவில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விருமாண்டி உள்ளிட்ட படங்களின் போட்டியை எதிர்கொண்டாலும் வெற்றி பெற்றது.[6]