எங்கள் செல்வி | |
---|---|
திரையரங்க வெளியீட்டு சுவரிதழ் | |
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | டி. ஈ. வாசுதேவன் அசோசியேட் புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் டி. எஸ். பாலையா பாலாஜி வி. ஆர். ராஜகோபால் தாராசிங் அஞ்சலி தேவி சி. கே. சரஸ்வதி உமா கே. ஆர். செல்லம் |
வெளியீடு | சூலை 8, 1960[1] |
ஓட்டம் | . |
நீளம் | 15704 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கள் செல்வி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஈ. வாசுதேவனின் தயாரித்த இப்படத்தை டி. யோகநாத் இயக்கினார். இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். இப்படம் இந்தி திரைப்படமான லாஜ்வந்தியின் மறு ஆக்கமாகும்.[2] இப்படம் தெலுங்கில் கன்னகூத்துரு (1960) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][3]
இப்படத்தின் பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[4]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "சொல்லத்தான் நினைக்கிறேன்" | பி. சுசீலா | 03:23 | |
2. | "வாராயோ வாராயோ" | பி. சுசீலா | 01:34 | |
3. | "என்னா பேரு வைக்கலாம்" | கே. ஜமுனா ராணி, பி. லீலா, எல். ஆர். ஈசுவரி | 04:38 | |
4. | "சில சில ஆண்டுகள் முன்னம்" | பி. லீலா (ம) குழுவினர் | 03:32 | |
5. | "அம்புலி மாமா வருவாயா" | ஏ. எல். ராகவன், எம். எஸ். இராஜேஸ்வரி (ம) குழுவினர் | 03:57 | |
6. | "உன்னை நம்பி அவள் இருந்தாள்" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | 03:11 | |
7. | "ஜய ஜய" | வி. என். சுந்தரம் | ||
8. | "சொல்லத்தான் நினைக்கிறேன் (மற்றொரு பாடல்)" | பி. சுசீலா, கே. ஜமுனா ராணி (ம) குழுவினர் |
படத்தில் தாரா சிங், கிங் காங் ஆகியோரிடையே நடந்த மல்யுத்தக் காட்சி இருந்தது. படப்பிடிப்பாக இருந்தாலும் தாரா சிங்கும் கிங் காங்கும் நேரடியாக மோதுவதே வழக்கம். ஒரு கட்டத்தில் தாராசிங் தாக்கியதில் கிங் காங்கின் வாயிலிருந்து குருதி வழிந்தது. அதைக் கவனித்த தயாரிப்பாளர் வாசுதேவன் "கட், கட்" என்று கத்திவிட்டு இருவரையும் விலக்கினார். இதனால் கிங் காங் தயாரிப்பாளரை தாக்கப் பாய்ந்தார். ஆனால் தாரா சிங் தலையிட்டு, படத்தின் தயாரிப்பாளர் அவர்தான் என்று அமைதிபடுத்தினார், என்று தயாரிப்பாளர் பின்னர் ஒரு செவ்வியில் நினைவு கூர்ந்தார்.[3]
சேமிப்பக வசதிகள் இல்லாததால் போதுமானதாக இல்லாததால் படத்தின் பிரதிகளை எரிக்க நேரிட்டதாக தயாரிப்பாளர் கூறினார்.[3] இருப்பினும், சில பிரதிகள் எஞ்சியிருப்பதாகத் தெரிகிறது.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)