![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பிவிஆர் சினிமாஸ் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
![]() | |
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | ஏப்ரல் 1974 |
தலைமையகம் | ராயப்பேட்டை, சென்னை, இந்தியா |
அமைவிட எண்ணிக்கை | 9 |
சேவை வழங்கும் பகுதி | |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | மகிழ்கலை |
தாய் நிறுவனம் | எஸ்பிஐ குழுமம் |
இணையத்தளம் | spicinemas |
எசுபிஐ சினிமாசு (SPI Cinemas) சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட எசுபிஐ குழுமத்தின் பல்திரை திரையரங்குகளும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பல்திரை திரையரங்குகளை இயக்குகின்றது. துவக்கத்தில் தனது முதல் பல்திரை வளாகத்தின் பெயரால் சத்தியம் சினிமாசு என அறியப்பட்டது; பின்னால் பல பல்திரை அரங்குகளை கட்டியபின்னர் எசுபிஐ சினிமாசு என மறுபெயரிடப்பட்டது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான வசதிகளுடன் திரையரங்களை இயக்குவதாக பெருமை கொண்டது.[1][2] இதன் திரையரங்குகளில், முக்கியமாக சத்தியம் சினிமா, திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னோட்டக் காட்சிகளையும் இசைத்தட்டு வெளியீட்டு விழாக்களையும் நடத்துகின்றனர்.[3] இங்கு விற்கப்படும் சோளப்பொரி இரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.[4]
இந்த நிறுவனமே இந்தியாவில் முதன்முறையாக டால்பி இசையமைப்பையும் ஆரோ இசையமைப்பையும் அறிமுகப்படுத்தியவர்களாவர்.[5][6] எசுபிஐயின் லூக்சு, பலாசோ திரைகளில் ஐமாக்சு திரைநுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.[7] இருப்பினும் இந்த ஐமாக்சு திரைகளுக்கு மாநில அரசு இதுவரை அனுமதி அளிக்காதநிலையில் கட்டணக் காட்சிகள் நடைபெறுவதில்லை.[8]
சத்தியம் சினிமா துவக்கத்தில் 1974ஆம் ஆண்டு ஏப்ரலில் "ரோயல் தியேட்டர் காம்ப்ளக்சு" என்ற பெயரில் வெங்கடகிரியின் மன்னரால் கட்டப்பட்டது.[9][10] 1,255 இருக்கைகளுடன், அந்தக் காலகட்டத்தில் சென்னையில் கட்டப்பட்ட மிகப் பெரிய பல்திரை அரங்கமாக இது விளங்கியது.[11]
எசுபிஐ குழுமம் இதனை 1999இல் வாங்கியது. இதன் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி கிரண் ரெட்டி தி இந்துவிற்கு 2012இல் கொடுத்த நேர்காணலில் தமது குடும்பம் இதனை வாங்கும்போது முதலில் அங்கு திரையரங்குகளை இடித்துவிட்டு கட்டிடங்களை எழுப்பவே விரும்பியதாக கூறியுள்ளார். நேர்காணலில் "சத்தியம் கட்டிடத்தை இடுக்கவே திட்டமிட்டிருந்தோம். நிலத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டால் திரையரங்கு வணிகரீதியாக இலாபமீட்டும் தொழிலாக இருக்கவில்லை" என்றார். இருப்பினும் பின்னர் இக்குடும்பம் பல மேம்பாடுகளை இத்திரையரங்குகளில் செய்த பிறகு ஆர்வம் கொண்டனர்.[12] ரெட்டி மேலும் மூன்று திரைகளை கூட்டியும் இருந்த மூன்றை சீரமைத்தும் மேம்படுத்தினார்.[13]
2009இல், திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு தங்கள் முதல் படமாக, திரு திரு துறு துறு எடுத்தனர்.[14]
மாநிலம்/ஆட்பகுதி | நகரம் | திரையரங்கு பெயர் | திரையரங்கு அமைவிடம் | திரைகளின் எண்ணிக்கை |
---|---|---|---|---|
தமிழ்நாடு | சென்னை | சத்தியம் சினிமா | ராயப்பேட்டை | 6 |
எசுகேப்பு சினிமா[17] | எக்ஸ்பிரஸ் அவென்யூ, ராயப்பேட்டை | 8 | ||
எசு2 பெரம்பூர் | இசுபெக்ட்ரம் மால், பெரம்பூர் | 5 | ||
எசு2 தியாகராசா | பழைய தியாகராச டாக்கீசு, திருவான்மியூர் | 2 | ||
பலேசோ சினிமா | தி போரம் விசயா, வடபழநி | 9 (ஒரு ஐமாக்சுத் திரையுடன்) | ||
கோயம்புத்தூர் | தி சினிமா[18] | புருக்பீல்ட்சு மால், கிருட்டினசாமி சாலை | 6 | |
ஆந்திரப் பிரதேசம் | நெல்லூர் | எசு2 நெல்லூரு | பழைய இராகவா பல்திரையரங்கு, போகாதோட்டா | 3 |
கருநாடகம் | பெங்களூர் | தி சினிமா | மகதி ரோடு | 5 |
மகாராட்டிரம் | மும்பை | ல ரெவ் | பாந்த்ரா | 1 |
கேரளம் | திருவனந்தபுரம் | சலா | 2 | |
புதுச்சேரி | புதுச்சேரி | 5 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: External link in |title=
(help)