எசுமத் தௌலத்சாகி

எசுமத் தௌலத்சாகி
பிறப்புஎசுமத் ஒல்- மொலுக் தௌலத்சாகி
1905 (1905)
தெகுரான், கஜர் ஈரான்
இறப்பு25 சூலை 1995(1995-07-25) (அகவை 89–90)
தெகுரான், ஈரான்
புதைத்த இடம்
பெசாத்-இ-சாரா, தெகுரான்
துணைவர்
ரேசா ஷா பகலவி
(தி. 1923; இற. 1944)
குழந்தைகளின்
பெயர்கள்
  • இளவரசன் அப்துல் ரெசா பகலவி
  • இளவரசன் அகமது ரெசா பகலவி
  • இளவரசன் முகமது ரெசா பகலவி
  • இளவரசி பாத்திமா
  • இளவரசன் அமீது ரெசா
மரபு
தந்தைஇளவரசர் குலாம் அலி மிர்சா தௌலத்சாகி
தாய்மொபதாட்ஜ் ஓட்- தௌலா மொராத்

எசுமத் தௌலத்சாகி ( Esmat Dowlatshahi ) ( 1905 - 25 ஜூலை 1995) ஈரானிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் . மேலும், ஈரான் நாட்டை 15 டிசம்பர் 1925 முதல் 16 டிசம்பர் 1941 முடிய ஆண்ட பகலவி வம்சத்தின் முதல் மன்னர் ரேசா ஷாவின் நான்காவது மற்றும் கடைசி மனைவியாவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

எசுமத் தௌலத்சாகி 1905 இல் பிறந்தார் இவர் குவாஜர் வம்சமத்தைச் சேர்ந்தவர். [1] [2] இவரது தந்தை குலாம் அலி மிர்சா "மோஜலால் தௌலே" தௌலத்சாகி (1878-1934). [1] இவரது தாயார் மும்தாட்ஜ்-ஓட்-தௌலே. [1] இரண்டாம் அசரப் சுல்தான் என்ற ஒரு சகோதரி உட்பட இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். [1] ஈரான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈரானிய தூதருமான மெக்ராங்கிசு தௌலத்சாகி இவரது உறவினராவார்.

திருமணம்

[தொகு]
தனது இளமையில் எசுமத் தௌலத்சாகி

எசுமத் தௌலத்சாகியும் மற்றும் ரேசா ஷாவும் 1923 இல் திருமணம் செய்து கொண்டனர். [3] [4] இவர் அவருடைய நான்காவது, கடைசி மற்றும் விருப்பமான மனைவிய்டுமாவார். [5] [6] இவர்கள் திருமணம் செய்தபோது ரேசா ஷா போர் அமைச்சராக இருந்தார். [3] தம்பதியருக்கு இந்த திருமணத்தின் மூலம் அப்துல் ரெசா, அகமத் ரேசா, மகமூத் ரெசா, பதேமே மற்றும் அமீத் ரெசா பகலவி என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். [1] இவரது கணவர் 1925 இல் ஈரானின் ஷா ஆனார். இருப்பினும், இவரது கணவரின் இரண்டாவது மனைவியான தாட்ஜ் உல்-மொலுக்கிற்கு ராணி என பட்டம் வழங்கப்பட்டது. [7] இதனால் எசுமத் தௌலத்சாகி மிகுந்த பொறாமை கொண்டதாக தனது நினைவுக் குறிப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். [7]

ரேசா ஷா தனது ஆட்சியில் ஈரானை மேற்கத்திய பாணியில் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியலில் முன்னேற்ற வழியில் அழைத்துச் சென்றார். இவர் நவீன ஈரானை நிறுவுவதில் நாட்டம் கொண்டவர். எசுமத் தௌலத்சாகி மற்றும் ரேசா ஷா ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் தெகுரானில் உள்ள மார்பிள் அரண்மனையில் வசித்து வந்தனர். [5] 1941 இல் ஈரானின் ஆங்கிலேய-சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு ரேசா ஷா பதவி விலக வேண்டியிருந்தது. ஷா செப்டம்பர் 1941 இல் மொரிசியசுக்கு நாடுகடத்தப்பட்டபோது இவரும் தனது கணவருடன் சென்றார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு இவர்கள் ஈரானுக்குத் திரும்பினர். [8] ஆட்சிக் கவிழ்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரானின் தேசிய சட்டமன்றத்தின் ஆதரவுடன், ஈரானின் பிரதம மந்திரியாக ரேசா நியமிக்கப்பட்டார்.

பிந்தைய வாழ்க்கை மற்றும் இறப்பு

[தொகு]
பெகேசு-இ சக்ராவில் உள்ள எசுமத் தௌலத்சாகியின் கல்லறை (இடமிருந்து 2வது).

1979 இல் நடந்த ஈரானியப் புரட்சிக்குப் பிறகும் தௌலத்சாகி ஈரானில் தங்கியிருந்தார். [8] இவர் 1980 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகானஸ்பேர்க்கில் உள்ள ரெசா ஷா பக்லவி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் [9] 25 ஜூலை 1995 இல் இறந்தார். [10] பின்னர் இவரது உடல் தெகுரானில் உள்ள பெகேசு-இ சக்ரா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 {{cite book}}: Empty citation (help)
  2. Eileen Pollack (Fall 2004). "The Jewish Shah". Fourth Genre: Explorations in Nonfiction 6 (2): 53. doi:10.1353/fge.2004.0041. 
  3. 3.0 3.1 {{cite book}}: Empty citation (help)
  4. Iran and the Rise of the Reza Shah: From Qajar Collapse to Pahlavi Power. London.
  5. 5.0 5.1 Equal Rights Is Our Minimum Demand: The Women's Rights Movement in Iran 2005. Minneapolis, MN.
  6. "Iranian Princess Fatemeh Pahlavi". The Beaver County Times (London). 2 June 1987. https://news.google.com/newspapers?nid=2002&dat=19870602&id=zWAtAAAAIBAJ&sjid=gNoFAAAAIBAJ&pg=4501,183926. 
  7. 7.0 7.1 Sexual Politics in Modern Iran. Cambridge.
  8. 8.0 8.1 Mehdi Jangravi. "Reza Shah's Wives". Institute for Iranian Studies. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
  9. "South Africa Museum". http://www.aparchive.com/metadata/youtube/b95724b31d6e4029cd0b42d00b6229f3. 
  10. "Reza Shah Pahlavi". Iran Chamber Society. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
  11. "Behesht-e Zahra Cemetery". Archived from the original on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]