சர் ஹென்றி ஸ்டீவர்ட் கன்னிங்ஹாம் | |
---|---|
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1872–1877 | |
முன்னையவர் | ஜான் டி. மைன் |
பின்னவர் | பேட்ரிக் ஓ 'சல்லிவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1832 |
இறப்பு | 1920 |
முன்னாள் மாணவர் | London Borough of Harrow Trinity College, Oxford |
பணி | வழக்கறிஞர் |
தொழில் | அரசு தலைமை வழக்கறிஞர் |
சர் ஹென்றி ஸ்டீவர்ட் கன்னிங்ஹாம் (Sir Henry Stewart Cunningham) (1832-1920) என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் 1872 முதல் 1877 வரை மதராஸ் மாகாண மலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். [1]
கன்னிங்ஹாம் 1832 ஆம் ஆண்டு ரெவ். ஜான் வில்லியம் கன்னிங்காம் என்பவரின் மகனாகப் பிறந்தார். கன்னிங்ஹாம் ஹாரோவில் கல்வி கற்றார். மேலும் ஆக்ஸ்போர்டின் டிரினிட்டி கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். இவர் 1859 இல் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட கன்னிங்ஹாம் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் செய்தார். 1872 இல் சென்னை மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்தார். 1877 ஆம் ஆண்டில், கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1877 முதல் 1887 வரை பணியாற்றினார். , 1876-78 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் காரணங்களை ஆராய 1878 ஆம் ஆண்டு இந்திய பஞ்ச ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கன்னிங்ஹாம் 1920 இல் இறந்தார். முன்னதாக 1889 ஆம் ஆண்டு அவர் இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் என கௌரவிக்கப்பட்டார் .