நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Ursa Minor |
வல எழுச்சிக் கோணம் | 13h 42m 39.201616s[1] |
நடுவரை விலக்கம் | +78° 03′ 51.979994″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 5.91[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G7III[2] |
B−V color index | 1.000[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −8.97±0.13[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −64.900±0.031 மிஆசெ/ஆண்டு Dec.: 46.164±0.033 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 9.6277 ± 0.0258[1] மிஆசெ |
தூரம் | 338.8 ± 0.9 ஒஆ (103.9 ± 0.3 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | +0.96[2] |
விவரங்கள் [2] | |
திணிவு | 2.39 (2.09–2.45) M☉ |
ஆரம் | 9.12 (8.51–9.77) R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 2.71±0.08 |
ஒளிர்வு | 43.7 L☉ |
வெப்பநிலை | 4892±22 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 2.44 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எதிப 120084 (HD 120084) என்பது சிறுகரடி விண்மீன் குழுவில் உள்ள 5.91 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுடன், இது புறநகர்ப் பகுதி வானத்தில் வெறும் கண்களுக்குத் தெரியும், ஒரு விண்மீனாகும். [4]
இது G7III வகை விண்மீனாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 4892 கெ, பொருண்மை 2.4 மடங்கு, ஒளிர்வு 43 மடங்கு , சூரியனின் ஆரம் 9 மடங்கு கொண்ட மஞ்சள் பெருமீனாகும். இந்த விண்மீனைக் கோள் ஒன்று சுற்றி வருகிறது.
வியாழனை விட குறைந்தது 4.5 மடங்கு பொருண்மையும் அதிக மையம்பிறழ்ந்த வட்டணையும்(0.66 மையப்பிறழ்வுடன்) கொண்ட ஒரு கோள் 2013 இல் நட்சத்திரத்தின் ஆர வேகத்தைத் துல்லியமாக அளவிட்டதால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விண்மீனில் இர்ந்து சராசரியாக 4.5 வானியல் அலகு தொலைவில், இந்தக் கோள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் மையம் பிரழ்ந்த வட்டணைகளில் ஒன்றாகும். 2022 ஆம் ஆண்டில், எதிப 120084 பி கோளின் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (year) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 5.762+4.638 −0.285 MJ |
4.341+0.133 −0.155 |
5.709+0.057 −0.088 |
0.732±0.123 |