நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox | |
---|---|
பேரடை | Ophiuchus |
வல எழுச்சிக் கோணம் | 18h 01m 31.2276s |
நடுவரை விலக்கம் | 00° 06′ 16.4026″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.103 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G2V |
B−V color index | 0.72 |
J−H color index | 0.273 |
J−K color index | 0.352 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 13.68±0.16 கிமீ/செ |
Proper motion (μ) | RA: -7.864±0.087 மிஆசெ/ஆண்டு Dec.: -20.380±0.086 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 18.7994 ± 0.0503 மிஆசெ |
தூரம் | 173.5 ± 0.5 ஒஆ (53.2 ± 0.1 பார்செக்) |
விவரங்கள் [1][2][3] | |
HD 164509A | |
திணிவு | 1.13 M☉ |
ஆரம் | 1.06 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.44 |
வெப்பநிலை | 5922 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 2.4 கிமீ/செ |
அகவை | 1.5±0.2 பில்.ஆ |
HD 164509B | |
திணிவு | 0.33 M☉ |
வேறு பெயர்கள் | |
BD+00 3837, HIP 88268,DENIS J084619.3-080136, 2MASS J18013121+0006163, Gaia DR2 4275421969292868224 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | 164509 data |
எச்டி 164509 (HD 164509) என்பது பாம்புப்பிடாரன் விண்மீன் குழுவில் உள்ள இரண்டு முதன்மை வரிசை விண்மீன்களைக் கொண்ட இரும விண்மீன் அமைப்பாகும்.
எச்டி 16450னெனும் முதன்மை விண்மீன் என்பது சூரியனைப் போன்ற G2 வகை மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும். இது இளமையானதும் பொன்மம்(உலோகம்) நிறைந்ததும் ஆகும், சூரிய ஒளியில் 160% கனமான கூறுகள் ஏராளமாக உள்ளது. தொடக்கத்தில் இந்த அமைப்பு ஒரு G5 வகை விண்மீனை உள்ளடக்கியதாகக் கருதப்பட்டது, ஆனால் 2016 ஆம் ஆண்டில் G2 முதன்மை வகையில் 36.5 ±1.9 வானியல் அலகு பிரிப்பில் M-வகை செங்குறுமீனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. [4] 2017 இல் விண்மீன் இணை வட்டணையில் இருந்ததற்கான சான்று மேலும் உறுதியானது [5]
2011 ஆம் ஆண்டில், ஒரு சூடான வியாழன் வகைக் கோளான எச்டி 164509 பி ஆர விறைவு முறையைப் பயன்படுத்தி, எச்டி 164509 முதன்மை விண்மீனைச் சுற்றிவரும் கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எச்டி 164509 பி கோள் நீண்ட கால [6] வட்டனையில் தற்போது நிலைப்பிலாத நிலையில் உருவாக்குவது சாத்தியமற்றது. மேலும், இது வேறு இடத்தில் உருவாக்கப்பட்டு பிறகு கைப்பற்றப்பட்ட வான்பொருளாக இருக்கலாம். [7]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.48±0.09 MJ | 0.875±0.008 | 282.4±3.8 | 0.26±0.14 |