நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Dorado |
வல எழுச்சிக் கோணம் | 04h 41m 54.37378s[1] |
நடுவரை விலக்கம் | -58° 01′ 14.7277″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.41 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G8V |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 62.63±0.12[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 66.303±0.023 மிஆசெ/ஆண்டு Dec.: −11.795±0.024 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 18.0190 ± 0.0195[1] மிஆசெ |
தூரம் | 181.0 ± 0.2 ஒஆ (55.50 ± 0.06 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 4.72 |
விவரங்கள் [2] | |
திணிவு | 1.053±0.023 M☉ |
ஆரம் | 1.54±0.03 R☉[3] 1.019±0.034[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.417±0.034 |
ஒளிர்வு | 1.04 ± 0.01[3] L☉ |
வெப்பநிலை | 5,607±47 கெ |
சுழற்சி | ~45 d |
அகவை | 4.8±1.5 Gyr[3] 2.525±1.954[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 30177 (HD 30177) என்பது தொராடோ விண்மீன் குழுவில் தோராயமாக 182 ஒளி ஆண்டுகள் (56 புடைநொடிகள் ) தொலைவில் அமைந்துள்ள 8 ஆம் தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும் . இது ஒரு மஞ்சள் குறுமீன் ஆகும். இதன் மையத்தில் ஐதரஜன்னணுக்கருவைத் தொகுக்கும் ஒரு வகை மஞ்சள் விண்மீன். இந்த விண்மீன் பிந்திய ஜி-வகையாக இருந்தாலும், இது சூரியனை விட குளிர்ச்சியானதும் குறைவான பொருண்மை கொண்டதும் ஆகும். ஆனால் இதன் ஆரம் பெரியது. இது சூரியனை விட 1.8 மடங்கு பழமையானது. இந்த விண்மீன் அமைப்பில் இரண்டு புறக்கோள்கள் உள்ளன.
2002, ஜூன் 13, அன்று வியாழனை விட 8 மடங்கு பொருண்மை கொண்ட HD 30177 b இன் கண்டுபிடிப்பை ஆங்கிலோ-ஆத்திரேலியக் கோள் தேட்டக் குழு அறிவித்தது. கண்டுபிடிப்பை விவரிக்கும் அறிவியல் கட்டுரை 2003 ஆம் ஆண்டில் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டது.[5][6] பின்னர் சுமார் 32 வருட வட்டணையில் இரண்டாவது பாரிய வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இரண்டு கோள்களின் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.[7]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (year) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 8.403+1.241 −0.489 MJ |
3.604+0.135 −0.147 |
6.884+0.014 −0.012 |
0.207+0.012 −0.017 |
c | 6.150+1.308 −0.341 MJ |
10.258+0.535 −0.480 |
33.088+1.596 −1.207 |
0.039+0.005 −0.013 |