எச்டி 60532 (HD 60532) அல்லது எதிப 60532 என்பது ஒரு வெள்ளை F-வகை) முதன்மை வரிசை விண்மீனாகும், இது பப்பிஸ் விண்மீன் குழுவில் தோராயமாக 84 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, அதன் முதன்மைப் பெயரை என்றி திராப்பர் பட்டியல் பெயரீட்டிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இது சூரியனை விட 1.44 மடங்கு பெரியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விண்மீன் சூரியனைப் போல (2.7 கிகா ஆண்டு) 59% மட்டுமே பழமையானது. மேலும், சூரியனைப் போல 38% மட்டுமே பொன்மத்(உலோகத்)தன்மை கொண்டுள்ளது.. 2008 ஆம் ஆண்டில், அதைச் சுற்றியுள்ள வட்டணையில் இரண்டு புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2008 செபுதம்பரில், வியாழன் போன்ற இரண்டு கோள்கள் விண்மீனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. இந்த இரண்டு கோள்களின் வட்டணைக் காலங்களும் 3:1 அதிர்வுகளில் இருப்பது போல் தெரிகிறது.[10]
↑ 4.04.1Johnson, H. L.; Iriarte, B.; Mitchell, R. I.; Wisniewskj, W. Z. (1966), "UBVRIJKL photometry of the bright stars", Communications of the Lunar and Planetary Laboratory, 4 (99): 99, Bibcode:1966CoLPL...4...99J
↑Edvardsson, B.; et al. (August 1993), "The Chemical Evolution of the Galactic Disk - Part One - Analysis and Results", Astronomy and Astrophysics, 275 (1): 101, Bibcode:1993A&A...275..101E