நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Monoceros |
வல எழுச்சிக் கோணம் | 08h 03m 28.66767s[1] |
நடுவரை விலக்கம் | -01° 09′ 45.7581″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.25[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G5[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 44.26±0.13[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −65.766±0.029 மிஆசெ/ஆண்டு Dec.: −206.999±0.019 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 18.7661 ± 0.0312[1] மிஆசெ |
தூரம் | 173.8 ± 0.3 ஒஆ (53.29 ± 0.09 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.09 ± 0.02[4] M☉ |
ஆரம் | 1.13 ± 0.03[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.37 ± 0.03[4] |
ஒளிர்வு | 1.28 ± 0.01[4] L☉ |
வெப்பநிலை | 5773 ± 55[4] கெ |
அகவை | 4.1 ± 1.4[4] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எதிப 66428 என்பது G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது சுமார் 174 ஒளி ஆண்டுகள் தொலைவில் மோனோசெரோசுஸ் விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இந்த விண்மீன் 8.25 தோற்றப் பொலிவுப் பருமையும், 5705 ± 27 கெ இன் விளைவுறு வெப்பநிலையையும் சூரிய ஒளிர்வு 1.28 மதிப்பையும் கொண்டு சூரியனைப் போன்றுள்ளது. அதன் முழுமையான பருமை 11.1 ஆகவும், புற ஊதா வண்ணக் குறியீடு 0.71 ஆகவும் உள்ளது. இது ஒரு செயலற்ற விண்மீனாகக் கருதப்படுகிறது மேலும் இது பொன்மம்(உலோகம்) நிறைந்தது Fe/H விகிதம் 0.310 ஆகும். இந்த விண்மீன் 1.14552 சூரியப் பொருண்மையளவு துல்லியமான பொருண்மை கொண்டது. இந்த துல்லியமானது வான்நடுக்கவியலை அளவிடும் கோரோட் பணியிலிருந்து வருகிறது.
2006 ஜூலையில், எதிப 66428 பி என்ற புறக்கோளின் கண்டுபிடிப்பு வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டது. இது ஆர விரைவு முறையைப் பயன்படுத்தி WM கெக் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நோக்கீடுகளிலிருந்து கண்டறியப்பட்டது. இது வியாழனை விட 3 மடங்குக்கும் அதிகமான பொருண்மையைக் கொண்டுள்ளது. மேலும் இது விண்மீனிலிருந்து 3.47 வானியல் தொலைவில் சுற்றிவருகிறது.[2][5]
2015 ஆம் ஆண்டில், ஒரு சீரான வட்டணை தீர்மானிக்கப்பட்டது, இது ஆரத் திசைவேகங்களில் ஒரு நேரியல் போக்கைக் கண்டறிய வழிவகுத்தது. இது அறியப்படாத தன்மையின் மிகவும் நெடுந்தொலைவு இணையைக் குறிக்கிறது, இது 2021 இல் வளிமக் கோளான எதிப 66428 சி அல்லது பழுப்பு குறுமீனாக இருக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. [6] 2022 ஆம் ஆண்டில், இரண்டு கோள்களின் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது. c கோளின் வட்டணைக் காலம், பொருண்மை ஆகியவை முந்தைய உயர்-பிழை மதிப்பீடுகளைக் காட்டிலும் கணிசமாகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது கோள்களின் பொருண்மையே தவிர, குறுமீன் அன்று என்பதை உறுதிப்படுத்தியது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (year) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 10.946+2.442 −3.845 MJ |
3.395+0.141 −0.157 |
6.214+0.015 −0.016 |
0.471±0.012 |
c | 1.764+3.404 −0.041 MJ |
9.408+1.945 −1.267 |
28.690+9.206 −5.348 |
0.207+0.097 −0.098 |
{{citation}}
: Missing or empty |url=
(help)