நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Crater |
வல எழுச்சிக் கோணம் | 11h 20m 51.76855s[1] |
நடுவரை விலக்கம் | -23° 13′ 02.4295″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | +8.00[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G4V |
B−V color index | +0.658 ± 0.003[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 4.25±0.12[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −199.735±0.022 மிஆசெ/ஆண்டு Dec.: −177.620±0.017 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 23.7206 ± 0.0216[1] மிஆசெ |
தூரம் | 137.5 ± 0.1 ஒஆ (42.16 ± 0.04 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | +4.91[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.97±0.02[4] M☉ |
ஆரம் | ~1[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.38 ± 0.08[2] |
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்) | 0.968±0.019[4] L☉ |
ஒளிர்வு (பார்வைக்குரிய, LV) | 0.83[note 1] L☉ |
வெப்பநிலை | 5759 ± 35[2] கெ |
சுழற்சி | 27 ± 4.0 days[2] |
சுழற்சி வேகம் (v sin i) | 1.19[2] கிமீ/செ |
அகவை | 4.44+0.68 −0.58[4] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
எதிப 98649 (HD 98649) என்பது G-வகை மஞ்சள் குறுமீனாகும், இது G4V என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது சூரியனைப் போலவே பொருண்மையும் விட்டமும் கொண்டுள்ளது, ஆனால் சூரிய ஒளிர்வில் 86% மட்டுமே உள்ளது. இது ஒரு சூரிய ஒப்புமையாகக் கருதப்படுகிறது. எதிப 98649 என்பது புவியில் இருந்து சுமார் 138 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. எதிப 98649 விண்மீன் கலயம் விண்மீன் குழுவில் காணப்படுகிறது.
1998 முதல் 2012 வரை, இலா சில்லா ஆய்வகத்தில் உள்ள CORALIE எச்செல்லி கதிர்நிரல்பதிவி வழி விண்மீன் கண்காணிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், ஒரு நீண்ட கால, பரந்த வட்டணையில் உள்ள கோள் ஆர வேகத்தால் கண்டறியப்பட்டது. இது நவம்பரில் வெளியிடப்பட்டது.
கண்டுபிடிப்பாளர்கள், " எதிப 98649பி மிகவும் மையம்பிறழ்ந்த உச்ச ஐந்து இடங்களில் உள்ளது 600 நாட்களுக்கு மேல் பெரியதான வட்டணை நேரத்தில் சுற்றிவருகிறது." இந்த மையப்பிறழ்வுக்கான காரணம் தெரியவில்லை. அபோஸ்ட்ரோனில்ஐருந்து10.4 வானியல் அலகு தொலைவிலும் புவியுடன் ஒப்பிடும்போது 250 மில்லியார்செகண்டுகள் பிரிப்பிலும், அவர்கள் அதை நேரடி படிமமாக்கக் கோளாக அறிவிக்கிறார்கள்.
கையாவிலிருந்து வானியற்பியலைப் பயன்படுத்தி, வானியலாளர்கள் எதிப 98649 பி இன் உண்மையான பொருண்மையை 9.7 ஆகக் கண்டறிய முடிந்தது., ஆர வேகத்திலிருந்து அதன் குறைந்த பொருண்மையை விட சற்றே அதிகம். [5]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (year) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 9.7+2.3 −1.9 MJ |
5.97+0.24 −0.21 |
14.74+0.88 −0.75 |
0.852+0.033 −0.022 |