எடித் கெல்மன் (Edith Kellman) (ஏப்பிரல் 4, 1911, வால்வர்த், விசுகான்சின் – மே 11, 2007, வால்வர்த், விசுகான்சின்[1]) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் யெர்க்கேசு உடுக்கண வகைபாட்டு முறைக்காகப் பெயர்பெற்றவர். இது MKK அமைப்பு எனவும் வழங்கப்படுகிறது.
இவர் 1911 ஏப்பிரல் 4 இல் விசுகான்சினில் உள்ள வால்வர்த்தில் பிறந்தார். இவரது தந்தையார் உலூத்விக் ஆவார். இவரது தாயார் எலன் இலாவெண்டெர் கெல்மன் ஆவார்.[1] இவர் இல்லினாயிசில் உள்ள வீட்டன் கல்லூரியில் படித்தார்.[2]
இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் ஒளிப்பட உதவியாளராகப் பணிபுரிந்தார்.இங்கு இவர் வில்லியம் மார்கனுடனும் பிலிப் கெனானுடனும் இணைந்து யெர்க்கேசு விண்மீன் வகைபாட்டு முறையை உருவாக்கினார். அந்த வான்காணகத்தை விட்டு சென்றதும், வில்லியம் பே உயர்நிலைப் பள்ளியில் கணிதவியல் கற்பித்தார்.[2] MKK வகைபாட்டு முறை 1943 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையை மார்கனும் கெனானும் கெல்மனும் பயன்படுத்தி, ஓ, பீ வின்மீன்களைக் கொண்டு நம் பால்வெளியாகிய பால்வழியின் சுருள் கட்டமைப்பைப் படம் வரைந்தனர். இதன் திருத்திய வடிவம் இன்றும் விண்மீன்களின் வகைபாட்டில் பயன்படுகிறது.[3]
{{cite book}}
: Unknown parameter |editors=
ignored (help)