எட்டாம் சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மன்னர் | |
ஆட்சி | 1770 - 1776 |
முடிசூட்டு விழா | சிறீரங்ஙகப்பட்டணம், 16 ஆகத்து 1770 |
அரச குலம் | உடையார் வம்சம் |
தந்தை | இரண்டாம் கிருட்டிணராச உடையார் |
தாய் | தேவஜ அம்மணி அவரு |
பிறப்பு | 27 ஆகத்து 1759 |
இறப்பு | 6 செப்டம்பர் 1776 சிறீரங்கப்பட்டண அரண்மனை |
சமயம் | இந்து |
மகாராசா சிறீ பெட்டத சாமராச உடையார் பகதூர் (27 ஆகத்து 1759 - 6 செப்டம்பர் 1776.) என்பவர் மைசூரின் மன்னராக 1770 முதல் 1776 வரை [1] இருந்தவர். இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் எட்டாவது சாமராச உடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் இரண்டாவது மகனாவார்.இவரின் அண்ணன் நஞ்சராச உடையாரின் இறப்பிற்கு பிறகு 2 ஆகத்து1770 அன்று முடிசூட்டப்பட்டார்.
16 செப்டம்பர் 1776, இவர் சிறீரங்கப்பட்டண அரண்மனையில், ஐதர் அலியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.