எட்டுப்பட்டி ராசா | |
---|---|
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | வி. நடராஜன் |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கிச்சஸ் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | பிரமிட் பிலிம்ஸ் இன்ரநஷனல் |
வெளியீடு | 14 பிப்ரவரி 1997 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எட்டுப்பட்டி ராசா (etttupattu rasa) 1997 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். நெப்போலியன், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி. நடராஜன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் பிப்ரவரி 14, 1997ல் வெளியிடப்பட்டுள்ளது.[1]
சிங்கராசு (நெப்போலியன்) ஓர் புத்திசாலியான கருணை குணம் கொண்ட மனிதன். இவர் எட்டு ஊரை பாதுகாப்பதுடன் கால்வாய் ஒன்றிற்கருகில் வசித்து வந்தார். பழனியம்மா (ஊர்வசி) சிங்கராசை ஒருமுகமாக காதலித்து வர ஆனால் சிங்கராசோ பாண்டியம்மாவையே (குஷ்பு) விரும்பினார். பாண்டியம்மா இரக்க குணத்தோடும் உணச்சிவசப்படுகிற பெண்ணாகவும் இருந்தார். சிங்கராசு இறுதியில் பாண்டியம்மாவை திருமணம் செய்தார்.
மாரிமுத்துவின் (மணிவண்ணன்) சகோதரனும் (சுகன்ராஜ்) பொன்ராசுவின் மகளும் (அபிதா) ஒருவரை ஒருவர் காதலித்தாலும் அவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பை காட்டினர். எனவே சிங்கராசு அவ்விரு ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததோடு அவர்களை சேர்த்து வைப்பதாக வாக்கும் கொடுத்தார். ஆனால் பிறகு அவ்விரு காதல் ஜோடியும் தற்கொலை செய்து கொள்ள பொன்ராசுவும் மாரிமுத்துவும் சிங்கராசுவை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். சிங்கராசு தனது வேலைகளிலே பெரும் பாலும் ஈடுபட்டமையினால் பாண்டியம்மா தனித்து போனாள். ஒர் நாள் மாரிமுத்து சிங்கராசுவை பற்றி பாண்டியம்மாவிடம் ஒரு பொய் கூறினான். இதனால் பாண்டியம்மா தற்கொலை செய்து கொண்டாள். ஆனால் ஊர்மக்களோ சின்ராசுதான் பாண்டியம்மாவை கொன்றான் என கூறத்தொடங்கினர். பழனியம்மா சிங்கராசுவுடன் வந்து தங்கினாள். சிங்கராசுவும் பழனியம்மாவை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தான். பின்னர் ஓர் நாள் பாண்டியம்மாவின் மரணித்ததற்கு காரணம் பொன்ராசு மற்றும் மாரிமுத்து ஆகியோர்னாவர் என்பது தெரியவர பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கான வரிகளை கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[2][3][4]"பஞ்சுமிட்டாய்" பாடல் மிகவும் பிரபலமானது.