எட்வர்டு எல். (நெடு) உரைட் (Edward L. (Ned) Wright) (பிறப்பு: ஆகஸ்ட் 25,1947 , வாழ்சிங்டன் டி. சி.) ஒரு அமெரிக்க வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார் , அவர் கோப் வைஸ் மற்றும் டபிள்யூஎம்ஏபி திட்டங்களில் தனது சாதனைகளுக்காகவும் , அண்டவியல் மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்த வலை பயிற்சிகளில் வலுவான பெருவெடிப்புக்கான ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.
உரைட் தனது அறிவியல் இளவல் பட்டத்தை இயற்பியலில் 1969 இலும் முனைவர் பட்டத்தை வானியலில் 1976 இலும் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சின் உயரமான ஏவூர்தி அளவீட்டிலும் பெற்றார். எம்ஐடி இயற்பியல் துறையில் சிறிது காலம் இணை பேராசிரியராக கற்பித்த பிறகு , உ ரைட் 1981 முதல் யுசிஎல்ஏவில் பேராசிரியராக உள்ளார்.[1]
அகச்சிவப்பு வானியலிலும் அண்டவியலிலும் உரைட் ஆர்வம் காட்டுகிறார். மில்லிமீட்டர் அலைநீளங்களில் திறம்பட உறிஞ்சவும் வெளியிடவும் கூடிய நுண்தூசிக் குறுணைகள் ம் அண்ட நுண்ணலை பின்னணியில் இருந்து ரகசியங்களை வரைவதில் முக்கிய காரணிகளாக இருக்கக்கூடிய பிற கூறுபாடுகளை அவர் ஆய்வு செய்துள்ளார். விண்வெளி அகச்சிவப்பு தொலைநோக்கி வசதி (SIRTF) அறிவியல் பணிக்குழுவில் பலதுறை அறிவியலாளராக உரைட் , 1976 முதல் SIRTF திட்டத்தில் (பிறகு சுஸ்பிட்சஸர் விண்வெளி தொலைநோக்கி என்று மறுபெயரிடப்பட்டது) பணியாற்றியுள்ளார்.[2] 1978 முதல் அண்டப் பின்னணி தேட்டத் திட்டத்தில் பணிபுரியும் குழுக்களில் இவர் ஒரு செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார். அவர் அகல்புல அகச்சிவப்பு அளக்கைத் தேட்டத் (WISE) திட்டத்தின் முதன்மை ஆய்வாளராக உள்ளார்.[3] ஜூன் 2001 இல் தொடங்கப்பட்ட வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்வில் (WMAP) தற்போதைய அறிவியல் குழுவில் உரைட் உறுப்பினராக உள்ளார். WMAP என்பது வளரும் புடவியின் தொடக்கநிலை அலைவுகளைப் பற்றிய COBE கண்டுபிடிப்பைப் பின்தொடர்வதற்கான ஒரு ஆய்வுப் பணியாகும்.
1994 முதல் 1998 வரை வானியற்பியல் இதழின் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார்.