எட்வர்ட் குட்சாத் Edward Kutchat | |
---|---|
பிறப்பு | அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியா |
பணி | பழங்குடி தலைவர் |
விருதுகள் | பத்மசிறீ |
எட்வர்ட் குட்சாத் (Edward Kutchat) என்பவர் இந்தியப் பழங்குடித் தலைவர்[1] மற்றும் கார் நிகோபார் தீவின் பழங்குடி குழுவின் தலைவராக இருந்தவர் ஆவார். கார் நிக்கோபார் தீவில் வானூர்தி நிலைய விரிவுபாட்டிற்காகத் தனது நிலத்தை இந்திய அரசாங்கத்திடம் வழங்கி ஒத்துழைத்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டு ஊடகங்களில் இடம்பெற்றார்.[2] ஜவகர்லால் நேரு இத்தீவிற்கு வந்த போது இவருக்கு தன்னுடைய கச்சுடையினை வழங்கி பெருமைப்படுத்தினார். இவர் நிக்கோபார் மக்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.[3] இந்திய அரசாங்கம் 1989-ல் இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]