எண்ணிம மீன் நூலகம் (Digital Fish Library)(டி.எஃப்.எல்) என்பது கலிபோர்னியா பல்கலைக்கழக (சான் டியாகோ) திட்டமாகும். இது தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எஃப்) உயிரியல் உள்கட்டமைப்பு முயற்சி (டி.பி.ஐ) நிதியளிப்பில் செயல்படுத்தப்படுகிறது. காந்த அதிர்வு அலை வரைவு (எம்ஆர்ஐ) மூலம் பெறப்பட்ட மீன்களின் உள் மற்றும் வெளிப்புற உடற்கூறியலின் இருபரிமாணம் மற்றும் முப்பரிமாண காட்சிகளை உருவாக்கி இணையத்தில் கிடைக்கச் செய்கிறது.
யு.சி சான் டியாகோவில் வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (சி.எஃப்.எம்.ஆர்.ஐ) பலவகை பயணர் வசதி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட காந்த அதிர்வு அலைவரைவியினைப் பயன்படுத்தி எண்ணிம மீன் நூலகத்திற்கான தகவல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கருவிகள் விலங்கு திசுக்களின் முப்பரிமாண படங்களை எடுக்கக் காந்தப்புலங்களைப் பயன்படுத்துகின்றன. ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் பாதிப்பு ஏதுமில்லாமல் காட்சிகளைக் காண அனுமதிக்கிறது. மேலும் காட்சிகளின் முப்பரிமாண உடற்கூறியல் அளவையும் விவரிக்கிறது. இசுகிரிப்சு சமுத்திரவியல் நிறுவனம் (SIO) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட மீன்களின் படங்களை யு.சி. சான் டியாகோவின் அறிவியல் கணக்கீட்டு மையத்தின் (சி.எஸ்.சி.ஐ) ஊழியர்கள் படியெடுக்கின்றனர்.
பிப்ரவரி 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, எண்ணிம மீன் நூலகத்தில் ஐந்து வகை மீன்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 300 சிற்றினங்கள் உள்ளன. இவை 5 வகுப்பில் 60 வரிசையில் 56 வரிசைகளும், நெல்சன், 2006ல் விவரித்த 521 மீன் குடும்பங்களில் 200 க்கும் மேற்பட்டவை உள்ளன. எண்ணிம மீன் நூலகத்தின் படங்கள் பல சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வுகளுக்களிலும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பிலும் பங்களித்துள்ளது.[1]
எண்ணிம மீன் நூலகப் பணிகள் குறித்து இரண்டு தேசிய புவியியல் ஆவணப்படங்கள் ஊடகங்களில் வெளி வந்துள்ளன. காந்த நேவிகேட்டர் [2] மற்றும் அல்டிமேட் சுறா.[3]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)