எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் (Enemy Property Act, 1968) 1947இல் இந்தியப் பிரிவினையை அடுத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய அரசால் எதிரி சொத்து சட்டம், 1968ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் சீனாவில் குடியேறியவர்களின் சொத்துக்களை கைப்பற்றி பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களை பாதுகாவலர்களாக நியமித்தது.
1968ஆம் ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் 7 சனவரி 2016 அன்று இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. [1] [2]பின்னர் திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், மார்ச் 8, 2016 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. இதன்படி பாகிஸ்தானுக்கு குடியேறிவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய இயலாது. எதிரி சொத்துகளை இப்போதும் பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் அல்லது அரசுத் துறையாக இருந்தாலும், அவர்களிடமிருந்து அச்சொத்தை கைப்பற்றி இந்திய அரசு ஏலம் மூலம் விற்பனை செய்யும் என்பதே இச்சட்டத் திருத்த முன்வடிவத்தின் சிறப்பு அம்சமாகும். [3][4]
இந்தியாவில் எதிரி சொத்து என்பது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் குடியுரிமையை எடுத்துக் கொண்டவர்களின் சொத்துக்களும், 1965 மற்றும் 1971 இல் நடந்த போர்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களும், 1962 இந்திய சீனப் போர்க்குப் பிறகு, இந்தியாவில் இருந்து சீனாவுக்குச் சென்ற மக்கள் விட்டுச் சென்ற சொத்துக்களும் ஆகும்.[5] இதன்படி 9,280 சொத்துக்கள் பாகிஸ்தானியருடையதும், 126 சொத்துக்கள் சீன நாட்டினருடையதும் என மொத்தம் 9,406 எதிரி சொத்துக்கள் உள்ளன. [6][7]
பிப்ரவரி 2023ல் இந்திய அரசால் கைப்பற்ற எதிரி சொத்துக்களின் மதிப்பு 3,400 ஆகும்.[8][9]
இந்திய அரசின் வசம் உள்ள எதிரி சொத்துக்களை எதிரி சொத்துகளின் பாதுகாவலர் மூலம் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனி 25 சூலை 2023 அன்று மக்களவையில் அறிவித்தார்.[12]
இந்தியா முழுவதும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 12,611 எதிரி சொத்துக்கள் உள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் 6,255 சொத்துக்களும், தமிழகத்தில் 67 எதிரி சொத்துக்கள் உள்ளது.