எத்தனை கோணம் எத்தனை பார்வை | |
---|---|
இசைத்தட்டு அட்டை | |
இயக்கம் | பி. லெனின் |
இசை | இளையராஜா |
நடிப்பு | தியாகராஜன் சிறீபிரியா சுரேஷ் நளினி |
ஒளிப்பதிவு | பி. லெனின் |
படத்தொகுப்பு | பி. லெனின் |
கலையகம் | வி. எம். மூவிஸ்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எத்தனை கோணம் எத்தனை பார்வை (Ethanai Konam Ethanai Parvai) என்பது 1982 ஆண்டில் முடிக்கப்பட்டும் வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் தியாகராஜன், சிறீபிரியா, சுரேஷ், நளினி ஆகியோர் நடிக்க படத்தொகுப்பாளர் பி. லெனின் இயக்கினார். அவரது சகோதரர் கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். ஜெயகாந்தனால் இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கபட்டது.[2][3] 2016 இல் ஜெயகாந்தனின் பாடல்கள் அடங்கிய இசைக் கோப்பை இந்திய-உருசிய பண்பாட்டு நட்புறவுச் சங்கம் வெளியிட முடிவு எடுத்தபோது [4] படம் குறித்த செய்திகள் மீண்டும் ஊடகங்களில் வெளியானது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4][5] பாடல் வரிகளை ஜெயகாந்தன் எழுதினார்.[6] "அலைபாயுதே கண்ணா" ( ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் அதே பெயரிலான பாடலின் மறு கலவை) [7] பாடல் பிரபலமானது.[8]
பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|
"எத்தனை கோணம் எத்தனை பார்வை" | மலேசியா வாசுதேவன் (ம) குழுவினர் | ஜெயகாந்தன் |
"என்ன வித்தியாசம்" | மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் | ஜெயகாந்தன் |
"விதைத்த விதை" | தீபன் சக்ரவர்த்தி, பி. எஸ். சசிரேகா | கங்கை அமரன் |
பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|
"கௌரி கல்யாண வைபோகமே" | கே. ஜே. யேசுதாஸ் | தியாகராஜ சுவாமிகள் |
"நிதி கலா சுகம" | கே. ஜே. யேசுதாஸ் | தியாகராஜ சுவாமிகள் |
"கள்ளனே ஆனாலும்" | கே. ஜே. யேசுதாஸ் | ஔவையார் |
"புகழ் சேரும்" | மலேசியா வாசுதேவன் | ஜெயகாந்தன் |
"நிமிர்ந்த நன்னாடை" | மலேசியா வாசுதேவன் | சுப்பிரமணிய பாரதி |
"பாஹிமாம்" | கே. ஜே. யேசுதாஸ் | தியாகராஜ சுவாமிகள் |
"அலைபாயுதே கண்ணா" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | ஊத்துக்காடு வேங்கட கவி |