![]() முகப்பு அட்டை | |
நூலாசிரியர் | மாயா ஏஞ்சலோ |
---|---|
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வகை | கட்டுரைகள் |
வெளியீட்டாளர் | ரேன்டம் ஹவுஸ் |
வெளியிடப்பட்ட நாள் | 2009 |
ஊடக வகை | பதிப்பு |
பக்கங்கள் | 166 |
ISBN | 978-0-8129-8003-5 |
முன்னைய நூல் | Even the Stars Look Lonesome |
எனது மகளுக்கு கடிதம் (Letter to My Daughter) (2009) என்பது ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞரான மாயா ஏஞ்சலோ எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த மூன்றாவது புத்தகம். இந்த புத்தகம் வெளிவந்த நேரத்தில், ஏஞ்சலோ இரண்டு கட்டுரை நூல்கள், பல கவிதை தொகுப்புகள் மற்றும் ஆறு சுயசரிதை புத்தகங்களை எழுதி முடித்திருந்தார். இவர் கருப்பர்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு செய்தி தொடர்பாளராக அங்கீகரிக்கப்பட்டு மிகவும் மதிக்கப்பட்டார். மேலும் "அக்காலகட்டத்தின் சிறந்த சுயசரிதை குரலாக"வும் மாறியிருந்தார்.[1] ஏஞ்சலோவுக்கு மகள்கள் என்று யாரும் இல்லையென்றாலும், அவரது நண்பர் ஓப்ரா வின்ஃப்ரேக்கு அவர் எழுதியவை உட்பட்ட 20 ஆண்டு காலக் குறிப்புகளையும் கட்டுரைக் கருத்துக்களையும் ஆராய்ந்த கொண்டிருந்தபோது "எனது மகளுக்கு கடிதம்" எழுதத் தூண்டப்பட்டார். ஏஞ்சலோவைத் தங்களது தாயின் முகமாக பார்த்த பல்லாயிரக்கணக்கான பெண்களுக்காகவும், தான் வாழ்நாள் முழுவதும் பெற்ற ஞானத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் இப்புத்தகத்தை எழுதினார்.
இந்தப் புத்தகத்தில், இல்லாத மகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக எழுதிய தொடக்க உரை மற்றும் சில கவிதைகள் உட்பட 28 சிறு கட்டுரைகள் உள்ளன.[2] புத்தகத்தின் விமர்சனங்கள் பொதுவாக சாதகமானவையாக இருந்தது; பெரும்பாலான விமர்சகர்கள் அந்த புத்தகம் ஏஞ்சலோவின் முழுமையான ஞானத்தையும், ஒரு அன்பான பாட்டி அல்லது அத்தையின் ஆலோசனை தரும் வார்த்தைகளையும் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். ஒரு விமர்சகர் இந்த புத்தகத்தின் கட்டுரைகள் "எளிமையாகவும்" மற்றும் "உணர்ச்சிபூர்வமானதாகவும்" இருப்பதாகத் தெரிவித்தார்.[3]
எனது மகளுக்கு கடிதம் மாயா ஏஞ்சலோவின் மூன்றாவது கட்டுரைப் புத்தகம். இவர் பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக 1971 ஆம் ஆண்டு வந்த இறப்பதற்கு முன் எனக்கு குடிப்பதற்கு குளிர்ந்த நீரைத் தாருங்கள் (Just Give Me a Cool Drink of Water 'fore I Diiie) என்ற கவிதை புலிட்சர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.[4] 1993 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக பில் கிளின்டன் பதவி ஏற்பு விழாவில் மாயா காலைப்பொழுதின் நாடித்துடிப்பில் ( "On the Pulse of Morning") என்ற தனது கவிதையை வாசித்தார்.[5] இதனால் அவர், 1961 இல் ஜான் எஃப். கென்னடி பதவி ஏற்பில் வாசித்த ராபர்ட் பிராஸ்ட்டுக்கு அடுத்தபடியாக, துவக்கவிழாவில் கவிதை வாசித்த முதல் கவிஞர் என்ற பெருமைக்குரியவாரானார்.[6] 2009 ஆம் ஆண்டில் இப்புத்தகம் வெளிவந்தபோது, மாயாவின் 7 பாகங்கள் கொண்ட தன்வரலாற்றில் ஆறு பாகங்கள் வெளியிடப்பட்டுவிட்டது. அவரது ஆறாம் பாகம் ஒரு பாடல் சொர்க்கத்திற்கு ஓடியது (A Song Flung Up to Heaven) 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் ஏழாம் பாகம் வரும்வரையில் இதுவே இறுதியான பாகமாக இருந்தது.[7] அவரது ஏழாம் பாகம் அம்மா & நான் & அம்மா 2013 ஆம் ஆண்டில் 85 ஆம் அகவையில் வெளிவந்தது.[8]
நான் ஒரு மகனை பெற்றெடுத்தேன், ஆனால் எனக்கு ஆயிரக்கணக்கான மகள்கள் இருக்கிறார்கள். நீங்கள் கருப்பு மற்றும் வெள்ளையராகவோ, யூதர் மற்றும் முஸ்லீமாகவோ, ஆசியர், ஸ்பானிஷர், அமெரிக்கராகவோ இருக்கலாம். நீங்கள் தடிமனாக மற்றும் மெலிந்தவராக மற்றும் அழகானவராக மற்றும் எளியவராக, ஓரினசேர்கையாளராக மற்றும் நேர்பாலினத்தவராக, படித்தவராக மற்றும் படிப்பறிவில்லாதவராக இருக்கலாம், நான் உங்களுக்காகப் பேசுகிறேன்.
ஏஞ்சலோவின் எனது மகளுக்கு கடிதம் முன்னுரையில் இருந்து[9]
இப்புத்தகம் வெளியிடப்பட்ட நேரத்தில், கருப்பர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு செய்தித் தொடர்பாளராக ஏஞ்சலோ அங்கீகாரம் பெற்றார்.[10] அறிஞர் ஜோனெ பிராக்ஸ்டன் இவ்வாறு கூறினார், "ஏஞ்சலோ எந்தவொரு சந்தேகமின்றி ... அமெரிக்காவின் மிகச்சிறந்த பெண் சுயசரிதை எழுத்தாளர்".[11] விமர்சகர் ரிச்சார்ட் லாங்கின் கருத்துப்படி, "ஏஞ்சலோ காலத்தின் ஒரு பெரிய சுயசரிதை குரல்".[1] ஏஞ்சலோ அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிரங்கமாக விவாதித்த முதல் ஆபிரிக்க-அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராகவும், அவரின் நூல்களில் முக்கிய பாத்திரமாக தன்னையே பயன்படுத்திக் கொண்ட முதல் எழுத்தாளராகவும் ஆனார்.