எனை நோக்கி பாயும் தோட்டா | |
---|---|
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | பி. மதன் கௌதம் வாசுதேவ் மேனன் வெங்கட் சோமசுந்தரம் ரேஷ்மா கட்டாளா |
கதை | கௌதம் மேனன் |
இசை | தர்புகா சிவா |
நடிப்பு | தனுஷ் மேகா ஆகாஷ் சசிகுமார் (இயக்குநர்) |
ஒளிப்பதிவு | ஜோமோன் டி. ஜான் |
படத்தொகுப்பு | பிரவீன் ஆண்டனி |
கலையகம் | கௌதம் மேனன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 29, 2019[1] |
மொழி | தமிழ் |
எனை நோக்கி பாயும் தோட்டா என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ் காதல் திகில் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கௌதம் மேனன் எழுதி, இயக்கி, தயாரித்தார். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ம.சசிகுமார் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். படத்தயாரிப்பு 2016 மார்ச்சில் தொடங்கியது,[2] ஆனால் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வரும் இன்னொரு படமான துருவ நட்சத்திரம் பட வேலைகளால் 2017 சனவரியில் தாமதம் ஏற்பட்டது.[3]
2017 சனவரியில், முன்னர் மிஸ்டர். எக்ஸ் என அழைக்கப்பட்ட இசையமைப்பாளர், உண்மையில் தர்புகா சிவா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2017 அக்டோபரில் கௌதம் மேனன் சிவா ஈடுபடுவதை உறுதி செய்தார்.[4]
2013 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கௌதம் மேனன் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற பெயரிலான படத்தின் திரைக்கதைப் பணிகளில் ஈடுபட்டுவருவதாக முதலில் தெரிவித்தார். இதில் சூரியா நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. மாறாக அதற்கு பதிலாக, மற்றொரு படமான, துருவநட்சத்திரம் படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளைத் துவங்கினர்.[5]
2016 மார்ச்சில் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி. ஜான் இப்படக் குழுவில் இணைந்தார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் ராமகுரு போன்றோர் முன்னணி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்தார்.[6] 2017 மே மாதத்தில், சுனைனா ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்தார்.[7]
2016 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி சென்னையில் இந்தப் படப் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.[8] ஒரு நீண்ட தயாரிப்பு இடைவேளைக்குப் பின்னர், திசம்பர் நடுப்பகுதியில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியது.[9] தனுஷ் தனது இன்னொரு படமான மாரி 2 ஐ முடிக்கவேண்டியுள்ளதால் அதற்கு முன் இதில் நேரம் செலுத்த மறுத்துவிட்டதால் தயாரிப்புப் பணிகள் மீண்டும் தாமதமாகின.[10]
துவக்கத்தில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கௌதம் இரகசியமாக வைத்திருந்தார். இசையமைப்பாளரை மிஸ்டர். எக்ஸ். என்று குறிப்பிட்டார். முதல் பாடலான மறுவார்த்தை பெப்ரவரி 10 அன்று வெளியானது, அடுத்து இரண்டாவது பாடலான நான் பிழைப்பேனோ மார்ச் 25 அன்று வெளியிடப்பட்டது. இந்த இரு பாடல்களுக்கும் பாடலாசிரியர் தாமரை ஆவார்.[11]
இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அதிகப்படியான ஊகங்களுக்குப் பிறகு, மிஸ்டர். எக்ஸ் என்பது கவுதமத்தின் டுவிட்டர் இடுகையின் மூலம் தர்புகா சிவா என்று அறியப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ. ஆர். ரஹ்மான், இளையராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இவர், கௌதமுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றுகிறார். அக்டோபர் 17 அன்று மறுவார்த்தை பாடல் வெளியிடப்பட்டது, இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இசையமைப்பாளராக தர்புகா சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.[12][13]
அனைத்துப் பாடல்களும் எழுதி இசையமைத்தவர் பிரேம் கேஆர்சிபிகே குமார்.
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "மறுவார்த்தை" | சித் ஸ்ரீராம் | 6:10 | |
2. | "நான் பிழைப்பேனோ" | சத்ய பிரகாஷ் | 6:01 | |
3. | "மறுவார்த்தை - இன்னொரு பதிப்பு" | சித் ஸ்ரீராம் | 5:22 | |
4. | "விசிறி" | சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி | 5:31 | |
மொத்த நீளம்: |
22:64 |