என். கேசவ பனிக்கர் (N. Kesava Panikkar) எனப்படும் நெடுமங்கட்டு கேசவ பனிக்கர் (1913-1977 [1] ) ஒரு இந்திய விலங்கியல் நிபுணர், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்,[2] மீன்வள மேம்பாடு குறித்து இந்திய அரசின் முன்னாள் ஆலோசகர் மற்றும் கொச்சின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.[3] அவர் 1973 இல் பத்மஸ்ரீ இந்திய சிவில் விருதைப் பெற்றவர்.[4]
கேசவ பனிக்கர், 1913ம் ஆண்டு, மே மாதம் 17ம் தேதியில், இந்திய மாநிலமான கேரளாவிலுள்ள கோட்டயத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோர்களான சங்குன்னி மேனன் மற்றும் ஜே.ஜானகி ஆகியோருக்கு பிறந்த ஒரே மகன் ஆவார். இவரது தந்தை திருவிதாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். பனிக்கர் தனது ஆரம்ப, இடைநிலை மற்றும் தொடக்கக் கல்லூரிக் கல்வியை கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரியில் செய்தார். பின்னர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் கடல் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதாகவும்,[5] கடல்வாழ் உயிரினங்கள் குறித்த மாதிரிகள் சேகரிப்பதற்காக இந்தியப் பெருங்கடலில் 22 முறை கடற்பயணங்களை மேற்கொண்டதாகவும் கருதப்படுகிறது. மேலும், தொடர்ச்சியான வரைபட மாதிரிகள் (அட்லஸ்கள்) தொகுக்கப்பட்ட பெருமைக்குரியவர் என்றும் போற்றப்படுகிறார்.[3]
தேசிய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், மத்திய மீன்வள கல்வி நிறுவனம் மற்றும் மத்திய மீன்வள செயல்பாட்டு நிறுவனம் ஆகியவை நிறுவப்பட்டதன் பின்னணியில் கேசவ பனிக்கரின் அளப்பறிய முயற்சிகள் பதிவாகியுள்ளன.
கேசவ பனிக்கர், கீழ்வரும் பல முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகவும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் ஆய்வகத்தின் இயக்குநராகவும் , வேளாண் அமைச்சகத்தின் (இந்திய) சிறப்பு கடமை அலுவலராகவும், சர்வதேச இந்திய இயக்குநராகவும் பணியாற்றினார். பெருங்கடல் பயணம், தேசிய கடல்சார் நிறுவனத்தின் இயக்குநராகவும், தேசிய வேளாண்மை ஆணையத்தின் உறுப்பினராகவும். இந்திய தேசிய அறிவியல் அகாதமி மற்றும் கேரள மாநில திட்டமிடல் வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர், இந்திய விலங்கியல் சங்கத்தின் ஜர்னல், இந்தியன் ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் பயாலஜி, இந்தியன் ஜர்னல் ஆஃப் மரைன் சயின்ஸ், மற்றும் மரைன் உயிரியல் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களில் இடம் பெற்றார்.
இந்திய தேசிய அறிவியல் அகாதமி, ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸ், லண்டன், நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ், இந்தியா [6] மற்றும் இந்தியன் ஜியோபிசிகல் யூனியன் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியராக இருந்தார்.[3] 1973 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு நான்காவது மிக உயர்ந்த இந்திய சிவில் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.[4] மேலும், டென்மார்க்கின் கலாத்தியா பதக்கம் (1953) இந்திய விலங்கியல் சங்கத்திலிருந்து சர் டோராப்ஜி டாடா பதக்கத்தையும், இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் சந்திரகலா ஹோரா பதக்கத்தையும் பெற்றார்.
கேசவ பனிக்கர், 1977ம் ஆண்டு, ஜூன் 24 ம் தேதியில் இறந்தார்.
{{cite web}}
: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)