என். கோபாலசுவாமி | |
---|---|
![]() 8 பிப்ரவரி 2004 அன்று புது தில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையராக பதவியேற்றபோது | |
15வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் 30 சூன்2006 – 20 ஏப்ரல் 2009 | |
குடியரசுத் தலைவர் | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பிரதிபா பாட்டீல் |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பி. டாண்டன் |
பின்னவர் | நவீன் சாவ்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஏப்ரல் 1944 |
தேசியம் | இந்தியர் |
பணி | இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (1966 - 2004); இந்திய தேர்தல் ஆணையாளர் (2004-06); இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (2006-09); தலைவர்: கலாசேத்திரா (2014-19) |
என். கோபாலசுவாமி | |
---|---|
தலைவர், விவேகானந்தா கல்விச் சங்கம் தலைவர், கலாசேத்திரா | |
என். கோபாலசுவாமி (N. Gopalaswami) (பிறப்பு: 21 ஏப்ரல் 1944), 2006 முதல் 2009 முடிய 15வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலும், 2004 முதல் 2006 முடிய இந்திய தேர்தல் ஆணையாளர் ஆகவும் பணியாற்றியவர். முன்னர் இவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக 1966 முதல் 2004 முடிய பணியாறினார்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற கோபாலசுவாமி கலாசேத்திரா அறக்கட்டளையின் தலைவராக 2014 முதல் 20159 முடிய 5 ஆண்டுகள் பணியாற்றினார். [1]தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா கல்விச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[2] இந்திய அரசு 2015-இல் கோபாலசுவாமிக்கு பத்ம பூசண் விருது வழங்கியது. [3]